அக்னிப்புரட்சி இன்றைய (18.02.2022) முக்கிய செய்திகள்.
* உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.
* இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
2021 டிசம்பா் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள், தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.
* இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு
* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது - தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்
* பிரச்சாரம் முடிந்த பின்னும் கோவையில் இருக்கும் கரூர் திமுக கட்சியினரை வெளியேற்ற கோரி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா
* நகர்ப்புற தேர்தலை நியாயமாக நடத்த துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மனு ஏற்கத்தக்கதாக இருந்தால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
* புதுச்சேரியில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் தற்போது 586 பேர் சிகிச்சையில் உள்ளனர்
* கோயில்களின் வரலாற்றை விளக்கக்காட்சி மூலம் காட்சிப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கோயில் தொடர்பான விவரங்களை நுழைவுவாயிலில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
* இந்திய எம்.பி.க்கள் பலர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச்சாட்டுக்கள் உள்ளன
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியென் லூங் சர்ச்சை பேச்சு
இந்தியாவின் சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
* முல்லை பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும்
முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தக் கூடாது கேரள சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு
* இந்தியாவில் இதுவரை 174.64 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன
ஒரே நாளில் 37.86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
* திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 45 பேர் திமுகவில் இருந்து நீக்கம்
கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
* 2008 ம் ஆண்டு நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு.
அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு.
எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
* பிப்ரவரி 23-மார்ச் 3ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடத்தப்படும்
தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும்
காலை நேர டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இனி காலை 9.30-12.30 வரை நடத்தப்படும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேரமாற்றமும் இல்லை.
ஜெல் பேனா , பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தலாம்
15.2.2022 கூட்டத்தின் அடிப்படையில் அரசின் ஆணையின் அடிப்படையில், அனைத்து துறை தேர்வுகளையும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.
ஆவின், வீட்டுவசதிவாரியம், மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனமும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற கடிதம் வந்துள்ளது.
வருவாய் துறை போன்றே, பிற துறைகளின் பணிக்கு ஏற்றார் போல தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மே மாதத்தில் இந்த தகவல் தெரியவரலாம்.
துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3 ம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு
ஏபிஆர்ஓ பணியிடங்கள் செய்தி துறையின் நியமனத்தில் இல்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
2018 க்கு பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடத்தப்படவில்லை- டிஎன்பிஎஸ்சி தலைவர்
தற்போது நியமிக்க உள்ள காலிபணியிடத்தில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்திற்கு மேல் விண்ணப்பங்கள் வரும் என நம்புகிறோம்.
ஒரு பதவிக்கு 10 பேர் மீதும், 75 ஆயிரம் பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். மெரிட் அடிப்படையில் அந்த தேர்வு இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான முதன்மை தேர்வுகள், தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில் நடைபெறும்
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை, பிப்ரவரி 23 ம் தேதி வெளியிடப்படும்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
* இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது
காப்புரிமை பெறாமல் பாடல்களை அந்நிறுவனங்கள் பயன்படுத்துவதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
* புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது -சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 கனிம வளத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் அள்ளியது தொடர்பாக தேனியை சேர்ந்த ஞனராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
* தர்ணா - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது:
முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கைது.
3 மணி நேரமாக போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் நடவடிக்கை.
தரையில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட மறுக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் போலீசார் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே தள்ளுமுள்ளு.
* நகர்ப்புற தேர்தலில் தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவ படை வரவழைக்கப்படும் - தமிழக அரசு
நகர்ப்புற தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவப்படை தேவையில்லை
சட்டம் - ஒழுங்கு பேணி காக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பு உறுதி
* உள்ளாட்சி தேர்தல் - தேர்வுகள் ஒத்திவைப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.
பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 9, 10 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தேர்வு தேதிகள் மாற்றம்
- அண்ணா பல்கலை.
* 2வது டி20 கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரையும் வென்றது இந்தியா.
No comments:
Post a Comment