அக்னிப்புரட்சி இன்றைய (19.02.2022) முக்கிய செய்திகள்.
* நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது.
வாக்கு பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
* சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் - வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை
தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டம்
ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 19 ஆவது வார்டு தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
* சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு செலுத்தினார்.
* கடலூர், கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் 100 இடங்களில் ட்ரோன்கள் மூலம் வயலில் பூச்சி மருந்து தெளிக்கும் திட்டமான "கிசான் ட்ரோன் யாத்ரா" திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
* கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட ருமேனியா நாட்டவருக்கு குடியுரிமை அதிகாரிகள் எச்சரிக்கை
விசா விதிமுறைகளை மீறி அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் நிகொய்டாவிடம் விசாரணை
மத, அரசியல் ரீதியான பிரசார நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை
* திருச்சி: திருவெறும்பூர் அருகே 38 வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு
வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லீப்பை பெட்டியில் போட்டு ஆர்ப்பாட்டம். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என புகார்
* தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றிய ஓட்டுநர் ஸ்ரீதர்
* நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக வாக்களிப்பு
தூத்துக்குடியில் மாநகராட்சித் தேர்தலில் நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக வாக்களித்தனர்.
நாடோடி வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டு பகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 52 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது.
இதையெடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு சென்று கீதா மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தது தங்களுக்கு புதிய அனுபவமாக அமைந்ததாக நரிக்குறவர் சமூக பெண்கள் தெரிவித்தனர்.
* இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் - பிசிசிஐ.
ரகானே, புஜாரா ஆகியோர் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம் - பிசிசிஐ.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சேராப்பட்டு அருகே உள்ள கொடியனூர் அருவியில் குளித்து கொண்டிருந்த நபர் பாறையில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழப்பு
* திருமங்கலம் 17வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை
அதிகளவு கள்ள ஓட்டு பதிவானதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடவடிக்கை
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் மறு வாக்குப்பதிவு கோரியும் அதிமுக புகார் மனு - மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் புகார் மனு
* ஜெர்மானிய குடிமக்கள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவு.
* ஜெர்மனியின் Lufthansa நிறுவனம் உக்ரைனுக்கான தனது விமானச் சேவையினை நிறுத்துவதாக அறிவிப்பு.
* சட்டப்பேரவையை கூட்டுவதற்கான மேற்கு வங்க முதல்வரின் பரிந்துரை கடிதத்தை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஜகதீப் தன்கர்
அரசியலமைப்பின் படி மாநில அமைச்சரவை பரிந்துரைத்தால் மட்டுமே பேரவையை கூட்ட முடியும் எனவும் முதல்வரின் பரிந்துரையை மட்டும் ஏற்க முடியாது என ஆளுநர் தரப்பில் விளக்கம்
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களித்தனர்.
* தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம்
திருப்பூர் - 60.66%
நாமக்கல் - 76.86%
விருதுநகர் - 69.24%
ராணிப்பேட்டை - 72.24%
மதுரை - 57.09%
தஞ்சை - 66%
மயிலாடுதுறை - 65.77%
நாகை - 69.19%
ராமநாதபுரம் - 68.03%
கள்ளக்குறிச்சி - 74.36%
திருவாரூர் - 68.25%
தர்மபுரி - 80.49%
செங்கல்பட்டு - 49.64%
புதுக்கோட்டை - 69.61%
திருவள்ளூர் - 65.61%
தருமபுரி - 80.49%
வேலூர் - 66.68%
திருச்சி - 61.36%
தென்காசி - 70.40%
No comments:
Post a Comment