அக்னிப்புரட்சி இன்றைய (20.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.02.2022) முக்கிய செய்திகள்.

* உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான   3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு

மூன்றாம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

* பஞ்சாப் : 23 மாவட்டங்களில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

* தமிழகத்தில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் தோல்வி பயத்தில் திமுக கள்ள ஒட்டு போட்டுள்ளது-எடப்பாடி பழனிசாமி.

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை போலீஸ் தடுக்கவில்லை.

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுதான் காரணம்- எடப்பாடி பழனிசாமி.

* 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு-மாநில தேர்தல் ஆணையம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு -தேர்தல் ஆணையம்.

7 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்-மாநில தேர்தல் ஆணையம்.

* உக்ரைனில் இருந்து இந்தியர்களும், மாணவர்களும் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

உக்ரைனில் பதற்றம் தொடரும் நிலையில், அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

மாணவர்களும், அத்தியாவசியமற்ற பணியாளர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம்.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயம்.

உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை உறிஞ்சத் துடிக்கும் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

* இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு (95) கொரோனா தொற்று உறுதி என பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்.

* மயிலாடுதுறை : சீர்காழி அருகே தொடுவாய் பகுதியில் இறால் தீவனம் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு.

* நாளை, மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages