அக்னிப்புரட்சி இன்றைய (21.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.02.2022) முக்கிய செய்திகள்.

* எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம்  நிறைவு.

* சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ₨48 குறைந்து ₨37,816-க்கு விற்பனை தங்கம் சவரனுக்கு ₨48 குறைவு

* மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம்

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 17,117 புள்ளிகளில் வர்த்தகம்

* மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு வணக்கங்கள்

அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம்

உலகத் தாய்மொழி நாள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

* இந்தியாவில் இதுவரை 175.46 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன

ஒரே நாளில் 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 206 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 5,12,109  ஆக அதிகரிப்பு

* முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கு ரத்து.

கடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பதிவான வழக்கு.

வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் உத்தரவு.

* ஆந்திர அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு:

ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி (49) மாரடைப்பால் உயிரிழப்பு.

ஆந்திராவிற்கான தொழிற்சாலை திட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக துபாயில் முகாமிட்டு பல்வேறு தொழிலதிபர்களுடன் முதலீடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, நேற்று ஐதராபாத் திரும்பிய நிலையில் உயிரிழப்பு.

* 21 தமிழக மீனவர்கள் விடுதலை.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் விடுதலை.

* சென்னை: மெரினா கடற்கரையில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டவசமானது-  உயர்நீதிமன்றம்.

* அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்கிறோம்; விரைவில் நியமிக்கப்படுவர் என நம்புகிறோம் - தலைமை நீதிபதி அமர்வு.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு.

* ஜெயக்குமார் கார் ஓட்டுநர் அளித்த புகாரில் 10 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு.

* லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை:

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

ஏற்கனவே, 4 வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5வது வழக்கிலும் சிறை தண்டனை விதிப்பு.

* உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்.

கடமையும், பொறுப்பும் நமக்கு மிகுதியாக இருக்கிறது - முதலமைச்சர்.

திமுகவினர் யாரேனும் எங்கேனும் ஓரிரு இடங்களில் அத்துமீறி செயல்படுகிறார்கள் என்ற செய்தி வந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடியும் வரை திமுக முகவர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்- திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்.

* வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்.

கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளதாக வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு.

* முதுகுளத்தூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு.

நீங்கள் அணுக வேண்டியது எங்களிடம் அல்ல…..

* உள்ளாட்சி தேர்தல் குறித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்.

உள்ளாட்சி தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை, அது தொடர்பான புகார்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்திடம் அணுகவும் என அறிவுறுத்தல்.

* கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது; குற்றவாளிகளை பிடித்துக்கொடுப்பது தவறா?

குற்றவாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது-எடப்பாடி பழனிசாமி.

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது

முறைகேடுகள் நடந்தால் அதிமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்- எடப்பாடி பழனிசாமி.

* சட்டை மட்டுமல்ல மொத்தமும் அம்பலமாகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.க நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார்.

கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும்.

அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்.

கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்.

12-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி.

உள்நாட்டிலேயே பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கார்பிவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

கொரோனால் பாதிக்கப்பட்ட வைகோ குணமடைந்த நிலையில், முதல்வர் சந்திப்பு.

வைகோவின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாக தகவல்.

இரவில் முன்னதாகவே கடையடைக்க சொல்லி உணவக உரிமையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினரின் செயல் வெட்கக்கேடானது.

உணவகங்களை இரவு 10.30க்குள் மூடச் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது.

காவல்துறையினருக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.

திமுக தொண்டரை அரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.

8 பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் காவல்துறை உதவியுடன் எந்த அளவுக்கு ஜனநாயக படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாக ஜெயக்குமார் கைது அமைந்துள்ளது.

இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் அதிமுக கிடையாது-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages