அக்னிப்புரட்சி இன்றைய (26.02.2022) முக்கிய செய்திகள்.
* உக்ரைனுக்கு வெடிமருந்துகளுடன் கூடிய டிரக்குகளை தனது நாடு அனுப்பியுள்ளதாக போலந்தின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்
* உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி
11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன.
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,32,95,901 ஆக உயர்வு;
குணமடைந்தோர் எண்ணிக்கை 36,28,73,083 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,56,302 ஆகவும் உள்ளது.
* ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவில் ஃபேஸ்புக் பக்கத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளதாக ஊடகங்கள் அறிவிப்பு.
* ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையுயர்வால் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்ப்பு.
* சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூ.37,904-க்கு விற்பனை.
* உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைக்கு செல்ல வேண்டாம் - உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்.
எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் தூதரகம் அறிவிப்பு.
உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது - இந்திய தூதரகம்.
* நாங்கள் சரணடைய போவதாக பொய்யாக செய்தி பரவி வருகிறது.
''நாங்கள் சரணடைய மாட்டோம், நாட்டிற்காக, நமது குழந்தைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்'' - சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ வெளியிட்ட உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி.
* 3,500கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
200கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை சிறைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார்கள்-உக்ரைன் அதிபர் அலுவலக ஆலோசகர்.
14 ரஷ்ய விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகள் மற்றும் 3,500 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு.
* ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி.
ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல்.
பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
* எட்டு உக்ரைன் கடற்படைக் கப்பல்களை அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது
* சற்று முன் Kyiv, Zhuliany என்ற இடத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது கப்பல் ஏவுகணை ஒன்று தாக்கியதாக உக்ரைனியன் நாட்டு ஊடகம் தகவல்
இந்திய குடிமக்கள், தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளாமல் (போலந்து, ருமேனியா, ஹங்கேரி) எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். - உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
* தலைநகர் Kyiv-வின் பாதுகாப்பிற்கு, தனிப்பட்ட முறையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரை விட்டு வெளியேறப் போவதில்லை என அவர் கூறியதாக தகவல்.
* அமெரிக்கா, பிரட்டன் உட்பட 28 நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் இதர இராணுவ உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக SKY News செய்தி நிறுவனம் தகவல்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
* ரஷ்யாவை தனிமைப்படுத்தவும், அதன் தூதர்களை வெளியேற்றவும் உலக நாடுகளுக்கு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்
உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். - மும்பை சர்வதேச விமான நிலையம்
* தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்திப்பு
* தெலங்கானா - ஐதராபாத் அருகே நல்கொண்டா மாவட்டத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது
இதில் விமானி பயிற்றுநர் மற்றும் பெண் பயிற்சி விமானி ஆகிய இருவரும் உயிரிழந்ததாக தகவல்
* கீவ் நகரில் உள்ள நீர்மின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக வெளியான செய்தி தவறானது
கீவ் நகரில் உள்ள நீர்மின் நிலையம் இன்னும் உக்ரேனிய படைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
* உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை மீட்பதற்காக சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை வீடியோல் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
* மனிதநேயம் குறித்து பேசிய சிறுவன் அப்துல்கலாமிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கி அரசாணை வழங்கினார்
* ரஷ்யா - உக்ரைன் போர் நீண்ட போராக இருக்கும் - நாம் அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்"
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பி வருகின்றனர். - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
* சிசிடிவி வீடியோ:உக்ரைனின் உள்துறை அமைச்சகம் வீட்டின் மீது ஷெல் தாக்குதலின் விளைவாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தொலைபேசியில் பேச்சு
பிற நாடுகள் உடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளது - விளாடிமிர் செலன்ஸ்கி
ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின
உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன - அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி
" ரஷ்யாவிற்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கும் குத்தகைக்கு விடுவதற்கும் அவர்களுடையதை பராமரிப்பதற்கும், முழு தடை விதித்து ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவு.
பழைய ஒப்பந்தங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் அறிவிப்பு.
* படையெடுப்பு' மற்றும் 'தாக்குதல்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்ய கண்காணிப்பு அமைப்பு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்
* உக்ரைனில் சிக்கித்தவித்த 219 இந்தியர்கள் ருமேனியா நாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
* உக்ரைனில் இருந்து மீட்கப்படும் கேரள மக்களின் பயணச் செலவை அரசே ஏற்கும்!” - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!
* ரஷ்ய படையெடுப்பில் 198 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: சுகாதார அமைச்சர்
*:உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் புதிய வீடியோ
நான் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக சில வதந்திகள் கிளப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை. எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை. இது எங்கள் நாடு செலன்ஸ்கி
* தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு இந்தியா கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்!
இந்தியப் பிரதமர் எங்கள் நாட்டு அதிபரோடு தொலைபேசியில் பேச வேண்டுகோள் விடுத்தோம். இது தொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் -இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் பேட்டி
* பாட்டில் குடிநீர் தரம் - ஆய்வு செய்ய உத்தரவு.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.
உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
தயாரிப்பு நிறுவங்கள் மற்றும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு.
* வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை; சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் - தமிழக அரசு.
* ரஷ்ய போர்க் கப்பல் தாக்குதலில் 13 வீரர்கள் வீர மரணம்.
கருங்கடலில் உள்ள உக்ரைனுக்குச் சொந்தமான பாம்பு தீவை ரஷ்யப்படையினர் கைப்பற்றினர்.
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்ற ரஷ்ய போர்க் கப்பலின் எச்சரிக்கையை புறந்தள்ளி, தீவை பாதுகாத்த 13 உக்ரைன் வீரர்கள் வீர மரணம்.
* பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி மூலம் உரையாடல்.
ரஷ்ய ஆக்கிரமிப்பை முறியடிக்கும் உக்ரைனின் நிலமையை பற்றி அவருக்குத் தெரிவித்தேன்: உக்ரைன் அதிபர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
* உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், போரை உடனடியாக நிறுத்துமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் அதிபர் செலன்ஸ்கியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.
* 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தனர்.
ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது.
No comments:
Post a Comment