அக்னிப்புரட்சி இன்றைய (01.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.03.2022) முக்கிய செய்திகள்.

* ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது ஆபரேஷன் கங்காவின் 9வது விமானம்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.

* வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ 105 உயர்ந்து ரூ 2145.50க்கு விற்பனை.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

* கடலூர்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது.

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை.

* ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், ரஷ்ய மத்திய வங்கி மீது தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவிப்பு.

* சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா, பெலராஸ் பங்கேற்க தடை - சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு.

ஏற்கனவே ரக்பி போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருந்த நிலையில் ஐஸ் ஹாக்கி போட்டிகளுக்கும் தடை.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை விதிப்பு.

* 01.03.2022 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

➤ பெட்ரோல் விலை - ரூ.101.40 (விலையில் மாற்றமில்லை)
➤ டீசல் விலை - ரூ.91.43 (விலையில் மாற்றமில்லை)

* முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.

தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொண்டாட்டம்.

* ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி.

உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாய்நாட்டிற்கு அழைத்து வர 24 மணி நேரமும் மத்திய அரசு உழைத்து வருகிறது.

4 மூத்த அமைச்சர்கள், சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது - தமிழக ஆளுநர்.

* பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - பிரதமர்.

தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் - பிரதமரிடம் முதல்வர் உறுதி.

* NATO கூட்டமைப்பில் இணைவது குறித்து பின்லாந்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.

பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் NATO-வில் இணைய முற்பட்டால், தீவிர ராணுவ விளைவுகளை சந்திக்க நேரிடும், என ரஷ்யா எச்சரித்திருந்தது.

* ‘நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.

கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்.

இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4வது குற்றவியல் நீதிபதி பொன்பாண்டியை, அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் தாக்கியதால் பரபரப்பு.

நீதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரகாஷை பிடித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை.

* தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி, பிற்பகல் 3 - 7 மணி வரையிலும் செயல்படும்.

இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி, பிற்பகல் 2 மணி - 6 மணி வரை செயல்படும் - தமிழக அரசு

* அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.

தனியார் டியூஷன், பகுதி நேர வேலை, இதர வேறு  தொழில்கள்  உள்ளிட்டவைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனடியாக இன்றே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும் என அறிவிப்பு.

* உக்ரைனில் இன்னும் 2,223 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தகவல்.

உக்ரைனில் மாநில வாரியாக எத்தனை தமிழக மாணவர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை தெரிவித்துள்ளது அரசு.

உக்ரைனில் அதிகபட்சமாக கார்கிவ் மாநிலத்தில் 728 மாணவர்களும், தலைநகர் கீவில் 352 மாணவர்களும் சிக்கித் தவிப்பதாக அரசு தகவல்.

உக்ரைனில்  தமிழகத்தை சேர்ந்த 2223 பேர் சிக்கியுள்ளனர்.

அதிலும் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் தலைநகர் கீவ் மற்றும் க்ஹர்கிவ் ஆகிய நகரங்களில் அதிக தமிழர்கள் சிக்கியுள்ளனர்

* உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை அழைத்து கொண்டு 8வது விமானம் டெல்லி வந்தடைந்தது

* உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு.

உக்ரைனில் கார்கிவ் நகரில், ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.

இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைனில் ராணுவத் தாக்குதல்கள் தொடரும். - ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர்

* ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மீது முழு அளவிலான பொருளாதாரப் போரை நடத்தப் போகிறது.

அமெரிக்கா & ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து 'பொருளாதாரப் போரை' துவக்கி உள்ளதால் ரஷ்யா பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும். - பிரான்ஸ் நிதி அமைச்சர்

* உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழப்பு  - மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிவிப்பு.

போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம்.

தகுந்த சூழல் வரும் போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்

* டெல்லியில் உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு

இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

* ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தது.

உக்ரைன், செர்னிஹிவ் நகரில் பெலாரஸ் படைகள் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் தகவல்.

* உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு பிரதமர் மோடி ஆறுதல்.

உக்ரைன் - கார்கிவ் நகரில் நிகழ்ந்த தாக்குதலில் இன்று காலை உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் தந்தையிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

* உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட குழுவின் கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.

கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்படும் நான்காவது உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும்.

* ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நடைபெறும் - தேசிய தேர்வு முகமை.

2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் - தேசிய தேர்வு முகமை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages