அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2022) முக்கிய செய்திகள்.

* உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் என  மத்திய அரசு அறிவிப்பு

இதுவரை கிட்டத்தட்ட 12,000 இந்தியர்கள்  உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாகவும், சுமார் 4,000 இந்தியர்கள் மட்டும் போர் நடைபெறும் பகுதியில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை செயலர் தகவல்

* உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆப்பிள்' நிறுவனம் எதிர்ப்பு.

ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தம்; ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.

* ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை.
தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷ்ய விமானங்கள் பறக்க கூடாது - அதிபர் பைடன்.

* நடந்து முடிந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,819 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி பதவியேற்றனர்.

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் பதவிகளுக்கு நாளை மறுநாள் மறைமுக தேர்தல்.

* கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து, அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களையும், தற்போது பணியாற்றிவரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை.

பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை, அரசுக்கு அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வித்துறை உத்தரவு.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்.

* அமெரிக்காவில் ரஷ்ய நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமான சொகுசு விடுதிகள், படகுகள், அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் கைப்பற்றப்படும்- ஜோ பைடன் அறிவிப்பு.

* ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.

உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புகின்றனர்- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

* கிருத்துவர்களின் தவக்காலம் தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் இன்று காலை  சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

* ரஷ்ய வான்வழிப் படைகள், உக்ரைனின் 2வது பெரிய நகரமான Kharkiv-வில் தரையிறங்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Kharkiv-வில் இரு நாட்டு படைகள், கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்.

* பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 9ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும்- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.

* சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது.

இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை மேலும் உயரலாம் என்ற அச்சம் நகை வாங்கும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

* கடலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறை சாவி காணாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு.

வாபஸ் பெற அனுமதித்து அதிமுக வேட்பாளர் சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* 2022-23 கல்வியாண்டு பிளஸ்-1 தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் ஜூன் 24-ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிப்பு.

* கார்கிவ் - போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்:

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் கட்டடம் இடிந்து நொறுங்கி தீப்பற்றி எரிகிறது.

சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக கிவ் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகை தகவல்.

* ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மார்ச் 9ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

மார்ச் 5ல் 3 விமானங்களையும், மார்ச் 6, 7, 8 தேதிகள் முறையே ஒரு விமானமும், மார்ச் 9 ஆம் தேதி ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது - மத்திய அரசு.

* மூன்றாம் உலகப் போர் அணு ஆயுத போராகவும், பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்.

மூன்றாம் உலகப் போர் வந்தால் அது மிகுந்த அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை உக்ரைன் தள்ளிப் போட அமெரிக்காவே காரணம்.

பொருளாதார தடைகளால் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை; ரஷ்யாவிற்கு ஏராளமான நாடுகள் நண்பர்களாக உள்ளன - ரஷ்ய வெளியுறவுத்துறை

* வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

நாளை மறுதினம் நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

* தமிழிசை சௌந்தரராஜன் முன்பு பாஜகவை விமர்சித்ததாக மாணவி லூயிஸ் சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது.

மாணவியின் தந்தைக்கு ரூ 2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு - மனித உரிமைகள் ஆணையம்.

* வாகன, ரயில் போக்குவரத்தை பெற முடியாத மாணவர்கள் Pisochyn (11 கிமீ), Babai (12 கிமீ) மற்றும் Bezlyudivka (16 கிமீ) வரை உடனடியாக நடந்து வருமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

* தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு;

நாளை முதல் வரும் 31ஆம் தேதி கட்டுபாடுகளில் தளர்வு.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்.

பொது இடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும்.- தமிழக அரசு.

* ஸ்மார்ட் சிட்டி ஊழல் - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக விடுவிக்கப்பட்ட தொகை முறைப்படி செயல்படுத்தப்பட்டதா?

அரசு வழிகாட்டுதலின்படி ஒப்பந்தங்கள் பின்பற்றப்பட்டதா?

பணிகளின் தரத்தை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா?

உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தவும் 3 மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் குழுவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.

* கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி.

பள்ளியில் நன்றாக படித்த 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை - குமாரசாமி.

தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார்.

நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன.

நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது.

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி விதிக்கப்படுகிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என குமாரசாமி சந்தேகம்

* உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை

மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages