அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2022) முக்கிய செய்திகள்.

*உக்ரைன்: கார்கிவ் அருகே நடந்த தாக்குதலில் ரஷ்ய மேஜர் ஜெனரல் VitalyGerasimov கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை இயக்குநரகம் அறிவிப்பு.

சிரியா படையெடுப்பு & 2 வது செச்சென் போரில் பங்கேற்றுள்ள இவர் கிரிமியாவை கைப்பற்றியதற்காக பதக்கம் பெற்றவர்.

* நகராட்சி துணைத்தலைவர் பதவி விலகினார்:

கடலூர்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா பதவி விலகினார்.

விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
போட்டி வேட்பாளராக திமுக சார்பில் வெற்றிபெற்றவர்.

* மாமல்லையில் இன்று இலவச அனுமதி இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில், அனைத்து பயணியரும், நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

* மகளிர் தினம் - குடியரசுத் தலைவர் வாழ்த்து!

அனைத்துத் துறைகளிலும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்து வரும் பெண்களின் பாதுகாப்பு & கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்.- குடியரசுத் தலைவர்

* உலகளவில் இதுவரை 44.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனாவில் இருந்து 38.13 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில் 60.26 லட்சம் பேர் உயிரிழப்பு

* கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்:

இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவப்படையில்  இணைந்துள்ளார்.

இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.40,160க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,020 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

* மகளிர் தினத்தில், பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு தலை வணங்குகிறேன்.

பெண்களை முன்னணியில் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இனிவரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும்- பிரதமர் மோடி வாழ்த்து.

* நாங்கள் நிரபராதிகள், எந்த குற்றமும் செய்யவில்லை" நீதிபதி சம்பத்குமார் முன்பு குற்றவாளிகள் யுவராஜ் உள்பட 10 பேரும் தெரிவித்துள்ளனர்.

* என் மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை யாருக்கும் நடக்ககூடாது-கோகுல் ராஜின் தாய் சித்ரா நீதிபதியிடம் தெரிவித்தார்.

* நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

ஜெயக்குமார் மனுவுக்கு பதில் அளிக்க, காவல்துறை அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைப்பு.

* பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

3 போக்சோ வழக்குகள் அவர் மீது இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார்.

* காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இன்று (08.03.2022) முதல் 07.04.2022 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு
tnusrb.tn.gov.in இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

* 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விவரங்களை dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

* அப்போலோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நிறைவு.

ஆறுமுகசாமி ஆணையத்தில், வரும் 21ம் தேதி ஆஜராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசிக்கு சம்மன் அனுப்ப முடிவு.

* கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை.

சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு.

தண்டனை விபரம்:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் மற்றும் ஆயுள் முழுவதும் சிறை.
யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 2 ஆயுள் தண்டனை விதிப்பு.
குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்கால் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு.

* சர்வதேச விமான சேவைகள் மார்ச் 27ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்.

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனுமதி - மத்திய அரசு

* 2022-2023 ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 18 ம் தேதி தாக்கல் வேளாண் நிதிநிலை அறிக்கை மாச்சு 19 ம் தேதி வெளியிடப்படுகிறது

* குடும்பத் தலைவி பெயரில் வாரிய வீடு: முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து.

ரூ 100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதி.

* வரும் 19 ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளி கல்வித்துறை.

20 ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20 ம் தேதி நடைபெறுகிறது - பள்ளி கல்வித்துறை.

* 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

* ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை -  அதிபர் ஜோ பைடன்.

புதின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் - பைடன்.

புதினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை.

எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துகொண்டுள்ளன.

ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.

* ரஷ்யாவிற்குள்ளிருந்து ஆங்கில செய்திச் சேவையை இன்று முதல் (மார்ச் 8) தொடர பிபிசி முடிவு.

பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையான அம்சமாக இருக்குமென்றும் அறிவிப்பு.

கடந்த வார இறுதியில் ரஷ்யாவிற்குள்ளிருந்து செய்தி சேகரிப்பதை பிபிசி நிறுத்தியிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages