அக்னிப்புரட்சி இன்றைய (13.03.2022) முக்கிய செய்திகள்.
* நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜனவரி இறுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாளை துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது.
இரண்டாவது அமர்வில், இரு அவைகளும் மொத்தம் 19 நாட்கள் கூட உள்ளன.
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு துவங்கும்.
மாநிலங்களவை ஒரு மணி நேரம், கூடுதலாக மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* பீகார்: தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைப்பு.
போதைப்பொருள் சார்ந்த மருந்துகளை தர மறுத்ததால் மருந்தகங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்.
* ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை நோக்கி ஏவுகணை தாக்குதலால் பதற்றம்.
ஈரானிலிருந்து தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.
* சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு; தினசரி பாதிப்பு 3,400 ஆக பதிவு.
2 ஆண்டுகளில் பதிவான பாதிப்புகளில் இதுவே அதிகம்.
* சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு.
இணை ஆணையர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
வருங்காலங்களில் தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்- அமைச்சர் சேகர்பாபு.
* இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு:
உக்ரைன் போர் எதிரொலியால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இதனால், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் கடுமையாக உயர்த்தியது.
அனைத்து ரக டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 75 ரூபாயும், அனைத்து ரக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 50 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கையில், ஒரே தடவையில் பெட்ரோல், டீசல் விலையை இந்தளவிற்கு அதிகரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்.
வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் கருத்துக்கேட்பு.
தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு.
* இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களில் ஆல் அவுட்.
இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
* ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்று மூழ்கிய மகனை மீட்கச் சென்ற தாய் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
* டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அம்பிகா சோனி வருகை.
இந்தக் கூட்டத்தில் 56 பேர் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கம்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ள காங்கிரஸ் கட்சியினர்.
5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை.
* பண்ட் அதிவேக அரைசதம்:
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் அதிவேக அரைசதம்.
28 பந்துகளில் அரைசதமடித்து கபில்தேவ் சாதனையை முறியடித்தார் பண்ட்.
* கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வே.கணேசன் தலைமையில் கருத்துக்கேட்பு.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு.
No comments:
Post a Comment