அக்னிப்புரட்சி இன்றைய (14.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.03.2022) முக்கிய செய்திகள்.

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று முதல் ஏப்.8 வரை நடைபெறும்.

* புதுச்சேரியில் இன்று முதல் மழலையர் பள்ளிகள்(எல்.கே.ஜி., யு.கே.ஜி.) திறக்கப்படுகிறது

* ஆசிரியர் தகுதி தேர்விற்கு இன்று முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

* காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு.

* கடலூர்: விருத்தாச்சலம் பணிமனை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்.

தரமற்ற உணவகத்தில் அரசு பேருந்தை நிறுத்தியதாக பயணிகள் அளித்த புகாரால் கடலூர் மண்டல பொது மேலாளர் நடவடிக்கை.

* வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள்.

2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாததை கண்டித்து வேலை நிறுத்தம்.

* கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் சாலையிலுள்ள ஏ.கே.டி நகர் பகுதியில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை என்பவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

* கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் வருத்தம்.

நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

கொரோனாவால் இழந்தோரின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர சொல்லியுள்ளோம்.

ஆனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர சொல்லவில்லை - நீதிபதிகள் விளக்கம்.

* தென்காசி சுரண்டை அருகே குலையநேரியில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 30 பேர் காயம்

* நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கூடாது.

நியூட்ரினோ திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு - முதல்வர்.

* செங்கல்பட்டு மாவட்டம், பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த சிறுமி, தானும் தனது குடும்பத்தாரும் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில்

அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் குகன், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல்.

* சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் 3 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல், ரூபாய் எண்ணும் இயந்திரத்தை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணத்தை எண்ணி வருகின்றனர்.

* இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அணி அபார வெற்றி.

பெங்களூருவில் பகலிரவாக நடந்த போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியா வென்றதால் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

* சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்.

சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் உள்ள 30 உதவியார்களிடம் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

* பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ஆம் தேதி வரை கூட்டங்களுக்கு தடை.

அனைத்து வகையான கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை.

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை.

* 91 பேருக்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வு:

91 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages