அக்னிப்புரட்சி இன்றைய (21.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.03.2022) முக்கிய செய்திகள்.

* தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

* மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்.

மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் மத்திய அரசு அளிக்கக் கூடாது என தீர்மானத்தில் வலியுறுத்த திட்டம்.

சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் முன்மொழிகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” - துரைமுருகன்

உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் nirfindia.org என்ற இணையதளத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் - மத்திய கல்வி அமைச்சகம்

* பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு.

இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை.

* இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 33,247 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்; இந்த திட்டம் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருளின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்.

* மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் துரைமுருகன்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது.

மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது - அமைச்சர் துரைமுருகன்.

காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம்.

காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும்.

* கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை -சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி.

இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் திரும்ப வழங்கப்படும் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்.

* மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை அதிமுக ஒருமனதாக ஆதரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

காவிரி நதிநீர் விவகாரத்தில் நதியின் குறுக்கே எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது கட்டாயம் - எடப்பாடி பழனிசாமி

* சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது தனி தீர்மானத்திற்கு பாஜக பாமக ஆதரவு.

மத்திய அரசை தமிழ்நாடு பாஜக பாமக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும் என உறுதி.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்.

* தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி; மாநிலத்தின் உரிமையை அரசு என்றும் பாதுகாக்கும், தமிழ்நாட்டு நலன்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்து எதுவும் எனக்கு தெரியாது- ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போதைய முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் வாக்குமூலம்.

எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது கூட தெரியாது. மருத்துவமனையில் தலைமை செயலாளரிடமே கேட்டறிந்தேன்- ஒ.பி.எஸ் வாக்குமூலம்

* திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயனாளிகளுக்கு தங்க நாணயம் வாங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளன.

இத்திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்குமேல் கூறி திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

* 133 பேருடன் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து.

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்.

* அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை - விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் வாக்குமூலம்.

தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே - ஓ.பி.எஸ்.

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னார்.

சசிகலா அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக் கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்.

* தமிழகத்தில் நிலவும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து மேதகு தமிழக ஆளுநர் திரு. ஆர் .என். ரவி அவர்களை பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் சந்தித்து,  மின் திட்டம் ஒன்றில், மரபுகளை மீறி ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக தி மு க அரசு செயல்படுவது குறித்தும் அறிக்கை தரப் பட்டது.

* தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு-உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறு ஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூ.36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது -தமிழக அரசு.

* தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது.

18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை.

* விழுப்புரம் - திருக்கோயிலூர் சாலையில் 3 மாத காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கடந்த ஆண்டில் பெய்த மழையால் அரகண்டநல்லூர் சிறுபாலம் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், இதனை சீரமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம்.

* குடியரசுத்தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார் தமிழ்நாட்டின் விராலிமலையைச் சேர்ந்த சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் 

90 வயதாகும் இவர் தேவதாசி மரபின் கடைசி பெண் என கருதப்படுகிறார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages