அக்னிப்புரட்சி இன்றைய 25.03.2022) முக்கிய செய்திகள்.
* பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரிப்பு.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67-க்கும், டீசல் ரூ.93.71-க்கும் விற்பனை.
* இந்தியாவுக்கு திடீர் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
* துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை.
* கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு.
கோயில் போராட்டங்கள் காரணமாக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு.
* வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது.
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும்- பல்கலைக்கழக மானியக்குழு.
* சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பயணி டிக்கெட் எடுக்காத நிலையில் நடத்துநருக்கு மெமோ வழங்கிய பரிசோதகர்.
இதை கண்டித்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காததால் பயணிகள் அவதி.
கண்காணிப்பு அதிகாரியின் மூலம் மெமோ ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் பேருந்துகள் இயக்கம்.
* உலகின் அனைத்து நாடுகளையும் இலக்காக வைக்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை - அதிபர் கிம் ஜாங் அன் பார்வையிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வடகொரியா.
* மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் - போக்குவரத்துத்துறை.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது.
ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு.
போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.
பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசிற்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
* உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனா உதவினால் கடும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் - அமெரிக்க அதிபர்.
பெல்ஜியமில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றவும் அதிபர் ஜோ பைடன் வலியுத்தினார்.
* தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு.
ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்; அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி துறை ரீதியான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு.
* அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம்.
நேற்று வெளியான அறிவிப்பில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் சர்ச்சை.
அசைவ உணவகங்களில் அரசுப்பேருந்துகளை நிறுத்தலாம் - போக்குவரத்துத்துறை.
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது - மின்சார வாரியம் எச்சரிக்கை.
போக்குவரத்து துறையை தொடர்ந்து மின்சாரத்துறையும் அறிவிப்பு.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு.
* பேறுகால விடுப்பை 9லிருந்து 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு.
2 வது திருமணம் மூலம் கர்ப்பமான பெண்ணுக்கு பேறுகால விடுப்பை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து வழக்கில் நீதி மன்றம் கருத்து.
* மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.
அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை.
பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் உத்தரவு.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.
* புதுச்சேரியில் வரும் 29ம் தேதி எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம்.
விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கலை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் - எதிர்க்கட்சிகள்.
* நீலகிரியில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு.
நீலகிரியில் மதுபானங்களும் நெகிழி பொருட்களில் விற்பனை செய்தால் டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்படும் - நீதிமன்றம் கண்டிப்பு.
* பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை.
கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்.
கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்.
நாமக்கல், பொதுப் பாதையில் பலபட்டரை மாரியம்மன் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரு மாதங்களில் அகற்ற வேண்டும்.
* உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்.
உத்தர பிரதேசத்தில் 2 வது முறை முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு.
லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
* தமிழ்நாடு-அமீரக உறவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்:
நம்பர் 1 தமிழ்நாடு என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது.
தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
* தமிழகத்திற்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதா இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளதா? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின் படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.
* துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில், தமிழ்நாடு வாரத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் சார்பில் அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* கேரளா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனாவில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உருவாகி வருகிறது; அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது என்றும், வந்தாலும் அதனை விரட்ட, மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment