அக்னிப்புரட்சி இன்றைய (26.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.03.2022) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல்-டீசல் விலை 76 காசுகள் உயர்வு:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47க்கு விற்பனை.

ஐந்தே நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 03 காசுகளும், டீசல் விலை 3 ரூபாய் 04 காசுகளும் உயர்வு.

* 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்

மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்குகிறது

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண 25% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகம்

* ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு.

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் எனவும் தகவல்.

* தமிழகம் முழுவதும் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு, கோவை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னையில் 99% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

* உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு.

4வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* பேட்டரி பைக் வெடித்து தந்தை - மகள் பலி:

வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை - மகள் உயிரிழப்பு.

நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம் காரணமாக பைக் வெடித்ததால் விபரீதம்.

புகை மூட்டத்தால் மூச்சுதிணறி துரைவர்மா(49), அவரது மகள் மோகன பிரீத்தி(13) உயிரிழப்பு.

* துபாய் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பும்போது பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வரும் 31ம் தேதி மாலை அல்லது ஏப்ரல் 1ம் தேதி காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி திரும்ப உள்ளார்.

* துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக  அரசு கையெழுத்து.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து.

இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற உள்ளன.

* பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே.

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது மட்டுமே, ஒருபோதும் நிரந்தரமாகாது;

முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை.

மே மாத ஊதியம் வழங்க கோரிய மனுவுக்கு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்.

* ஈரோடுமாவட்டம்
ஆப்பகூடல்பேரூராட்சி
துணைத் தலைவராக பாமக வெற்றி...
திரு.குமாரசாமி அவர்கள்
பேரூராட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்...

* செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிகாடு பேரூராட்சி துணை தலைவராக மாவட்ட செயலாளர் கி.கணபதி வெற்றி பெற்றார்.

* ஐபிஎல்2022: தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி

சென்னை 131-5 / 20
கொல்கத்தா 133-4 / 18.3

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages