அக்னிப்புரட்சி இன்றைய (27.03.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கு விற்பனை.
டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் அதிகரித்து ரூ.95-க்கும் விற்பனை.
* வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலைக்கழகம்.
* கோவிட் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது
புடின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது, என பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
உலகம் மிக நீண்ட மோதலுக்கு தயாராக வேண்டும் எனவும் பைடன் பேச்சு.
சமீபத்தில், ரஷ்ய அதிபர் புடினை ஒரு 'போர்க் குற்றவாளி' மற்றும் 'சர்வாதிகாரி' என்று பைடன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவில் மேலும் 1,421 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 149 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை
* ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு;45 பேர் காயம்
* திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில் எட்டாவது கால யாகசாலை பூஜை தொடக்கம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சுவாமி தரிசனம்
* தஞ்சை டிஐஜி தலைமையில் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
15 வது ஐபிஎல் சீசன் - மும்பையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை - டெல்லி அணிகள் மோதல்
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை
* வியாசர்பாடி - வில்லிவாக்கம் இடையே இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 மணி வரை 17 புறநகர் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு
* சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை;
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்; ஆனால், விலைவாசி ஏறி உள்ளது - எடப்பாடி பழனிசாமி.
தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு.
துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது - ஈபிஎஸ்.
ஞாயிறு சிந்தனை
💥 மனதாரப் பாராட்டுங்கள்..''
ஒருவரின் நல்ல செயல்களுக்காக உண்மையாகப் பாராட்டிப் புகழும் போது அவர் மனதில் நீங்கள் ஒரு கோபுரத்தில் அமர்கிறீர்கள்.
அழகு, அன்பு, படிப்பு, பதவி,திறமை இப்படி ஒருவரிடம் இருக்கலாம்..
அவைகளை அறிந்து உண்மையாகப் புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் புகழப்பட்டவரால் மனதில் நினைத்தை சாதித்துக் கொள்கிறீர்கள்.
குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக் கண்டு அவர்களைப் பாராட்டிப் பாருங்கள்.. அவர்கள் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகப் பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.?
அவ்வாறு அவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் திறமைகளைப் பாராட்டும் போது களைப்பின்றி இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியுமே.
‘நிறைய நேசத்தையும், பாசத்தையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்திலே எரிந்து விழுந்து கெட்ட பெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்?
நமக்கு ஏனோ பிறரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை.
இந்த உலகில் எல்லோருமே பாராட்டுதலை எதிர்ப்பார்க்கின்றனர்.
அப்படித் தங்களுக்குப் பாராட்டுகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகின்றார்கள்...
இது உங்களுக்கும், எனக்கும், ஏன் எல்லோருக்குமே பொருந்தும்.
நாம் ஒருவரை ஒரு நற்செயலுக்காக பாராட்டுவது என்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும்..
அது மட்டுமல்லாமல் அவரது அந்த நற்குணம் மேலும் செம்மையடைய உதவும். மேலும் உங்களுக்குள் இருக்கும் நட்பும், உறவும் மேலும் வலுப்பெறும்.
உங்களின் மீதான பிறரது மதிப்பும் மரியாதையும் உயரும்.
பாராட்டுங்கள் - உங்களுக்குப் பாராட்டத் தோன்றினால் உடனே பாராட்டி விடுங்கள்.
மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாராட்டு என்ற ஊக்கியைப் பயன்படுத்தி வெளிக் கொணருங்கள்.
''மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல் தான்.
ஆனால் அது தரும் பலனோ அபரிமிதமானது.
பாராட்டு விழுபவனை எழ வைக்கும்..
ஆம்.,. பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக்கான படிக்கட்டு.
ஆம்.,நண்பர்களே..,
பாராட்டு என்பது புகழக்கூடிய வார்த்தைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை.
ஒரு சிறிய புன்னகையும் கூட பிறரின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.
ஒருவரை நீங்கள் பாராட்டுவதை மற்றவர்கள் பார்க்கும் போது, உங்களிடம் இருந்து இந்த நல்ல பண்பைக் கற்றுக் கொள்வர்.
உங்கள் மீதும் நல்ல மதிப்பு வரும். பாராட்டு என்பது இதயங்களை வெல்லும் சக்தி.
பிறரைப் பாராட்டும் போது, அதைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மேலும் கடுமையாக உழைப்பர். நேர்மையாகச் செயல்படுவர்.
பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.
உலகம் உங்கள் வசப்படும்.
💕 வாழ்க வளமுடன்
* கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே சிறுவரப்பூர் கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து, மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பாமக இளைஞர் அணித்தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இடம் கூறினார்கள்.
* நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் - தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்.
மின்சேவை பாதிக்காதபடி இருக்க, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தல்.
மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
மின் தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயக்கப்பட வேண்டும்- மத்திய அரசு.
* மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது!
* துபாய் பயண நேரத்தில், விமானம் இல்லா சூழலால் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்;
தனி விமானத்திற்கான செலவு அரசு செலவல்ல. திமுகவின் செலவு- தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
* அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
கடல் கடந்து சென்றேன், கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன்.
துபாய் பயணத்தை பற்றி ஒரு சிலர் பேசி அரசியலுக்காக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர் - துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
நம்மில் ஒருவர்- நமக்கான முதல்வர் என்ற தலைப்பில் அமீரக தமிழர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
துபாயில் பெரும் மகிழ்ச்சியை தமிழ் சொந்தங்கள் வெளிப்படுத்தினர்.
இலக்கை நிர்ணயித்து உறுதியுடன் பயணித்தால் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும் என்பதை கற்க முடிந்தது -முதலமைச்சர் ஸ்டாலின்
* நீட் தேர்வில் 9,19,400க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு
9,17,875வது இடத்தைப் பிடித்தவருக்கு ராஜஸ்தானில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு- பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
தேர்வில் 15% மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட, பணம் இருந்தால் இடம் கிடைக்கும் என்றால் தகுதி எவ்வாறு ஊக்குவிக்கப்படும்?
இப்படித்தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி.
நீட் தேர்வால் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நீட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
* துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அபுதாபியில் நாளை காலை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரதமர் இம்ரான்கான், சற்று நேரத்தில் முக்கிய உரையாற்றுகிறார்.
நாளை இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
* PVR மற்றும் INOX நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு
No comments:
Post a Comment