அக்னிப்புரட்சி இன்றைய (30.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.03.2022) முக்கிய செய்திகள்.

* இஸ்ரேல் - டெல் அவிவ் நகரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி சுட்டதில் 5 பேர் உயிரிழப்பு, பலர்  படுகாயம்

* சென்னையில், இன்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* கடந்த 9 நாட்களில் மட்டும், 8 முறை அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல் ரூ.5.29, டீசல் ரூ.5.33 விலை உயர்ந்துள்ளது.

* பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு பெரும்பான்மையை இழந்தது

எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாக எம்.க்யூ.எம் அறிவிப்பு

நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது

இம்ரான்கானுக்கு 164 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு. ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்கள் தேவை.

* இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார பேரவை அறிமுகம்.

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுகாதார பேரவை அறிமுகம்.
மாவட்ட வாரியாக சிறந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு.

மாவட்ட வாரியாக சிறந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு.

* கடலூர் : சிறுபாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணசாமி கைது.

நெல் கொள்முதலுக்கு விவசாயிடம் ரூ 10,000 லஞ்சம் பெற்ற புகாரில் நடவடிக்கை.

* சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான ரூ.34.22 கோடியில் அழகுபடுத்தப்பட்ட சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைப்பெற்றது.

* கடலூர்: சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, தனது வீட்டில் தற்கொலை.

குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதிவைத்து, அம்மாணவி தற்கொலை செய்துள்ளார் - போலீசார் விசாரணை.

* மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்.6 ல் தமிழக பேரவை கூடுகிறது. மானிய கோரிக்கை விவாதம் மே 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

* நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் ₹5 முதல் ₹85 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது

சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு; பஞ்சாபில் விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹45 - ₹240 வரை அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளையே கடைசி நாள்:

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, பான் கார்டு முடக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

* அண்ணா விருதுபெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசியுள்ளார்.

யாரையாவது திட்டுவதாக இருந்தால்கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள்.

மரியாதையாக திட்டவில்லை என்றால் நீங்கள் தமிழரே கிடையாது- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் - மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை வேதனை.

* போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.சிவசங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

* எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

சர்வதேச தரத்தை பின்பற்ற எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்.

எலக்ட்ரிக் வாகன பாதுகாப்பு தரம் குறித்து ஜி.கே.வாசன் எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி பதில்.

* மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்க ஒப்புதல்.

மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு.
இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ 9,544.5 கோடி செலவினம் ஏற்படும்.

47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் - மத்திய அரசு.

* தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும்- அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

* திருச்சி மாவட்டம் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணக்குமார் ₹40 லட்சத்துடன் விழுப்புரத்தில் சிக்கினார்.

பணத்துடன் விழுப்புரம் வழியாக சென்னை சென்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

* தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக கரூரில் இன்று 104.9 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

* டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.

வரும் ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் கலைஞர் - அண்ணா அறிவாலயத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

* வன்னியர் தனி இடஒதுக்கீடு…! மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் 40 ஆண்டுகால லட்சியம்!
நம் 21 வன்னிய சொந்தங்களின் உயிர் தியாகம்! மற்றும் தொடர் போராட்டத்திற்குப் பிறகு பெற்ற 10.5 %  இட ஒதுக்கீடுக்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages