அக்னிப்புரட்சி இன்றைய (31.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.03.2022) முக்கிய செய்திகள்.

*சென்னையில் இன்று, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 107.45 ரூபாய்க்கு விற்பனை. டீசல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 97.52 ரூபாய்க்கு விற்பனை.

* இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரை இல்லாத நிகழ்வாக நாளொன்றுக்கு 13 மணிநேர மின் தடையை இன்று முதல் அரசு அமல்படுத்தியுள்ளது.

சுற்றுல்லாத்துறை முடக்கம், பணவீக்கம், கடும் பொருளாதார நெருக்கடி காரணங்களால் நிதி பற்றாக்குறையில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. டீசல், பெட்ரோல் பற்றாக்குறை, நிலக்கரி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

நாளொன்றுக்கு 10 மணி நேர மின்தடை அமலில் இருந்த நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று 13 மணி நேரமாக நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.

கடும் மின் தடையால் தேயிலை உற்பத்தி, உள்ளிட்ட தொழில்கள் முடங்கும் என்றும் அதனால் அரசுக்கு கூடுதல் நிதி பிரச்சினை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

* இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த 27 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேவை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகபட்ச கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் வாரத்துக்கு 170 விமான சேவைகள் என்று அதிகரித்துள்ளது.

இதே போன்று மற்ற விமான நிறுவனங்களும் இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவைகளை அதிகரித்துள்ளன.

* ஜூலை 17-ல் நீட் தேர்வு:

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - UG தேர்வு ஜூலை 17-ல் நடைபெறும்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

* நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது..!

பெட்ரோல், டீசல் விலை நாள் தோறும் உயர்ந்து வரும் நிலையில் சுங்கச்சாவடி கட்டணங்களையும் உயர்த்துவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து.

* வன்னியர் உள் இடஒதுக்கீடு வழக்கு -மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு.

சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது.

10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாமக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை - உச்ச நீதிமன்றம்.

* வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு முழு மூச்சுடன் முயற்சி மேற்கொண்டும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக, அவசர கோலத்தில் அதிமுக சட்டம் இயற்றியதால் ரத்து செய்யும் நிலை - அமைச்சர் துரைமுருகன்

சரியான அடிப்படை தரவுகள் இல்லாததாலேயே வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து

திமுக ஆட்சியில் அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீடு சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டன.

சரியான ஆதாரங்கள் அடிப்படையில் திமுக கொண்டு வந்த ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் துரைமுருகன் அறிக்கை

* டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பைக் ரேசில் ஈடுபட்டு கைதான வாலிபர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 30 நாட்கள் உதவிபுரிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும்.

தினமும் காலை 8மணி முதல் 12 மணி வரை வார்டு பாய்களுக்கு உதவிபுரிய வேண்டும் - நீதிபதி ஜெயச்சந்திரன்.

* பிரதமர் மோடியுடன் தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். மாநில அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்- டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் கோரிக்கை.

* டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிவுடனான சந்திப்பை அடுத்து தற்போது உள்துறை அமைச்சருடன் சந்திப்பு.

* டெல்லி பயணத்தின் மர்மத்தை மக்களுக்கு விளக்குவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? - எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி.

* பதவிக்கு வந்த 10 மாதகாலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்ற பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வருகின்றன- எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாடகத்திற்கு பிரதமர் மயங்கமாட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு உண்மை எனில் உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி-எடப்பாடி பழனிசாமி.

* டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி:

பிரதமரை சந்தித்து 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன்.

கவனமுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார், சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது; அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.

அமைச்சர்கள் அனைவருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 2 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல - சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

* ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம் - முதல்வர் ஸ்டாலின்

கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது

இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம்

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு வர வேண்டிய வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியுள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்

திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருவதாக கூறி உள்ளார்கள் - முதல்வர்

* ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் டன்சோ போன்ற உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக இன்று ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை.

சுவிக்கி - 450 பேர், சோமாட்டோ - 278 பேர் , டன்சோ - 188 பேர், மற்றவை - 62 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.1.35 லட்சம் அபராதம் வசூல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages