5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பற்றி சில செய்திகள்.
1, கோவா (40 இருக்கைகள்): பெரும்பான்மைக்கு தேவையான 21இல் 20இல் பாஜக வெல்லும் எனத் தெரிகிறது. காங் (12), ஆம் ஆத்மி (2), திரிணாமூல் (4) ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. ஜெயித்த 3 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். கவர்னரை சந்தித்து, 14ஆம் தேதி ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருக்கிறார் பாஜக முதல்வர்.
2, மணிப்பூர் (60 இருக்கைகள்): 31இல் பாஜக முன்னிலை. தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி. காங் 4 இடங்களில் முன்னிலை. சுயேட்சைகள் 24. பல சுயேட்சைகளும் பாஜகவுக்கு ஆதரவு.
3, உத்தராகண்ட் (70 இடங்கள்): 48இல் பாஜக. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஒரே கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்ததில்லை இங்கே. இதுவே முதல் முறை! துரதுருஷ்டவசமாக முதல்வர் வேட்பாளர் தோல்வி.
4, பஞ்சாப் (117 இடங்கள்) : ஆம் ஆத்மி 92 இடங்களில் முன்னிலை. காங் 18! சன்னி போட்டியிட்ட இரு இடங்களிலும் படுதோல்வி. சித்துவும் தோல்வி!
குறிப்பு: உத்தராகண்ட் & பஞ்சாப் ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டியது. குழப்பங்கள் செய்து தோல்வியை தழுவியது காங்கிரஸ் சாதனை!
5, உத்தரபிரதேசம் (403 இடங்கள்): பாஜக (271 முன்னிலை) தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஒரே கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 36 வருடங்களாகிறது இங்கே. அதை முறியடிக்கிறார் யோகி. காங்கிரஸ் - பகுஜன் காணாமல் போயின. பொதுவாக பாஜகவை விலக்கும் முஸ்லிம்களும், யாதவர்களும் இம்முறை பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
குறிப்பு: சென்ற முறை 312 உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இம்முறை கிட்டத்தட்ட 130 பேருக்கு (சட்டமன்ற உறுப்பினர்களுக்கு) வாய்ப்பு தரவில்லை - அவர்கள் தொகுதி மக்களுக்கு அவர்கள் மீது அதிருப்தி காரணமாக. பலரும் கட்சியை எதிர்த்து தனித்து போட்டியிட்டு தோல்வி. ஒரு சிலர் சமாஜ்வாதி சென்று அங்கும் தோற்றனர்.
No comments:
Post a Comment