சமூக முன்னேற்ற சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை
சமூக முன்னேற்ற சங்கத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அந்த அமைப்பின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முனைவர் சிவப்பிரகாசம், மாவட்ட செயலாளர்கள் அன்பழகன் (திருவண்ணாமலை), பூபதி (மயிலாடுதுறை), குமார் (திருவாரூர் வடக்கு), கரிகாலன் (திருவாரூர் தெற்கு), கஞ்சனூர் முரளிதரன் ( தஞ்சாவூர்), பா.இரா.யோகேஸ்வரன் ( புதுக்கோட்டை), திருமுருகன் (நாகப்பட்டினம்), கோ.இராஜேந்திரன் (அரியலூர்), வே.லோகேஷ் (சென்னை), கலியபெருமாள் (விழுப்புரம்), மாவட்ட தலைவர்கள் எம்.செல்வராஜ் ( விழுப்புரம்), கம்பன் கணேசன் (தஞ்சாவூர்), மாவட்ட பொருளாளர்கள் ஜவகர் (மயிலாடுதுறை), கண்ணன் (தஞ்சாவூர்), நிர்வாகிகள் கே.பொன்மலை, எம்.ஜெயபாலன், க.பூபதி, மா.செல்வக்குமார், இரா.சாமித்துரை, அரியலூர்&பெரம்பலூர் மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகி இரா. இராஜமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக முன்னேற்ற சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment