தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ம.க.ஸ்டாலினுக்கும், மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள்.
1. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ம.க.ஸ்டாலினுக்கும், துணைத் தலைவராக தேர்வான கமலாவுக்கும் வாழ்த்துகள். அவர்களின் வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்!(1/3)
2. ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மார்ச் 4-ஆம் நடக்கவிருந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அது சாதாரணமான வெற்றியாக இருந்திருக்கும். ஆனால், சதிகளையும், தடைகளையும் சட்டப் போராட்டத்தின் மூலம் தகர்த்து பெற்றிருக்கும் வெற்றி சிறப்பான வெற்றியாக மாறியிருக்கிறது!(2/3)
3. பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ள ம.க.ஸ்டாலினும், பாட்டாளி மக்கள் கட்சியின் பிற உறுப்பினர்களும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் ஆடுதுறையின் வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்!(3/3)
No comments:
Post a Comment