அக்னிப்புரட்சி இன்றைய (01.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.107.45க்கு விற்பனை. டீசல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.97.52க்கு விற்பனை.
* சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 965.50க்கு விற்பனை.
* அரசுப் பேருந்துகளில் படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை உத்தரவு.
பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத் துறை உத்தரவு.
பேருந்து புறப்படும்வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் - போக்குவரத்துத் துறை.
* தமிழகத்தில் கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கியது.
செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது.
* ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வார்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார்;
கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம்- துரைமுருகன், பொதுச்செயலாளர், திமுக.
* அமேசான் நிறுவனத்தின் செயல் தலைவர் Jeff Bezos-ன் 'Blue Origin' நிறுவனத்தின் 'New Shepard' விண்கலம் மூலம்
வின்வெளி சுற்றுலா சென்ற 6 நபர்கள் பூமியிலிருந்து 106 கிலோமீட்டர் தூரம் வரை சென்று சில நிமிடங்கள் விண்வெளியில் கழித்து மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்
* திருப்பூரில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ₨30 வரை உயர்வு
ஒரு கிலோ நூல் ₨420 முதல் ₨450 வரை விற்பனையாகிறது
* டெல்லியில், அரசு மாதிரி பள்ளியை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து
பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளியின் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்
* சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும்
நாட்டில் எங்குமே சுங்கச்சாவடி இருக்கக் கூடாது - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
* டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதல்வர் வலியுறுத்தல்
* விமானங்களுக்கான எரிபொருள் விலை 2% அதிகரித்து ஒரு கிலோ லிட்டர் ₨1,12,924.83க்கு விற்பனை
* அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கியது மகாராஷ்டிரா அரசு
இந்தியாவில் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசு ஆணை
* தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பிரதமர்:
பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் கலந்துரையாடல்.
ஆண்டுதோறும் பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டினார் பிரதமர்.
பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன.
தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும்.
தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை.
நம்முடன் படிக்கும் சக மாணவர்களை போல் இருக்க வேண்டும், படிக்க வேண்டும் என ஒருபோதும் நினைவில் இருத்தாதீர்.
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம் - மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.
பாடத்தின் மீது முழு கவனம் இருந்தால் ஆன்லைனிலும் சிறப்பாக படிக்கலாம்.
பள்ளியில் அமர்ந்து ஆசிரியரை பார்த்தாலும் முழுகவனம் பாடத்தில் இல்லையென்றால் சரியாக கற்க முடியாது-ஓசூரில் உள்ள பள்ளி ஆசிரியர் சந்திரசூடேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில்.
* டெல்லி : அரசு மாதிரி பள்ளியை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து
பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெல்லியில் உள்ள மார்டன் பள்ளிகளை போன்று விரைவில் தமிழ்நாட்டிலும் திறக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து
குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு
ட்விட்டரில் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டதாக குண்டாஸ் போடப்பட்டிருந்தது.
* பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடத்தி முடிக்க வேண்டும்
செய்முறை மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் மே 4ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் - பள்ளித் தேர்வுத்துறை அறிவுறுத்தல்
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு;
மதுரையில் நடைபெற்று வரும் 23வது மாநில மாநாட்டில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக சு.வெங்கடேசன், கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், ஜி.சுகுமாறன் ஆகியோர் தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களாக சுதிர், சிந்தன், பாலா, மாரியப்பன் ஆகியோர் தேர்வு.
23வது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது;
தமிழ்நாட்டில் பாஜக காலுன்றாத வகையில் பணியாற்ற ஆலோசிக்கப்பட்டது;
கோயில்களில் பாஜகவின் செயல் திட்டங்களை முறியடிக்க வியூகம் வகுத்துள்ளோம்- சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
* உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
சமாதான முயற்சியில் இந்தியா அதன் பங்களிப்பை வழங்க தயாரக உள்ளது - பிரதமர்
டெல்லியில் பிரதமர் மோடி உடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பு
* தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக திமுக உள்ளது.
நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது.
நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது- பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பதை போல் அகில இந்திய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நட்பை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்.
அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும்;
அகில இந்திய அளவில் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி உருவாக்க வேண்டும்.
பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்து அணியை உருவாக்க வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நல்லுறவு நீடிக்கிறது;
ஆனால் நீட் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் அதிக தாமதம் உள்ளது, அது சரியல்ல.
* தலைநகர் டெல்லியில் முகக்கவசம் இனி கட்டாயம் கிடையாது
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை திரும்பப் பெற்றது டெல்லி அரசு
கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து முடிவு
No comments:
Post a Comment