அக்னிப்புரட்சி இன்றைய (02.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.04.2022) முக்கிய செய்திகள்.

* இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - அதிபர் அறிவிப்பு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை; இலங்கையில் நீடிக்கும் குழப்பம் - அதிபர் இல்லத்துக்கு முன் அரங்கேறிய வன்முறையில் ஈடுபட்ட 54 பேர் கைது

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் விலை அதிகரித்து பெட்ரோல் ரூ.108.21 காசுக்கும், டீசல் ரூ.98.21 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு.

பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல்.

அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர்.

* ரமலான் நோன்பு தொடங்கியது.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று முதல் ரமலான் நோன்பைத் தொடங்கினர். சவூதி அரேபியா, ஆப்கான், குவைத், ஈராக்கில் பிறை காட்சியளித்தது.

* தமிழக மக்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு.

இது ட்ரெய்லர் தான்; இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் லாரிகள் கட்டணம் உயர்வு!

லாரிகள் கட்டண உயர்வால் கோயம்பேட்டில் காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்தது!

காய்கறி மற்றும் பழங்கள் விலை கிலோவுக்கு ₨.10 முதல் ₨.15 உயர்ந்தது!

* நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தல்.

நகரப்பகுதிகளில் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது நியாயமற்றது - அன்புமணி ராமதாஸ்.

* குஜராத் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளித்து குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாநிலத்தின் மொத்த மின்சார தேவையில் 500 மெகாவாட் பற்றாகுறையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

* நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மயங்கி  விழுந்தார்.

சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

* இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அறிவிப்பு.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ள.

* கோவிலுக்கு சென்று திரும்பி வந்த போது நிகழ்ந்த சோகம்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

சேம்பரை என்ற இடத்தில உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றபோது வேன் விபத்துக்குள்ளானது.

மலை மீது ஏறிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.      

* திருப்பத்தூர் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம்

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

* டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்பு.

விழாவில் அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார்   முதலமைச்சர் ஸ்டாலின்.

டெல்லி திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் திமுக எம்.பி., டி.ஆர். பாலு

திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன்

* தமிழகத்தில் நாளை ரமலான் நோன்பு தொடக்கம்.

தமிழகத்தில் நாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது - தலைமை காஜி.

பிறை தென்பட்டதால் நாளை முதல் ரமலான் நோன்பை தொடங்கலாம் என அறிவிப்பு.

* தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை - பள்ளிக்கல்வித்துறை.

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages