அக்னிப்புரட்சி இன்றைய (04.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.04.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 109.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ 99.42 ஆகவும் விற்பனையாகிறது.

* சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, சவரன் ரூ. 38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,810-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60-க்கு விற்கப்படுகிறது..

* இலங்கை: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு.

* ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக நோட்டீஸ்

மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தார் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு

* இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில் நடவடிக்கை.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம்.

* சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஹாங்காய் நகருக்கு விரைந்த சுகாதார பணியாளர்கள்..மக்கள் அச்சம்..!!

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில், தோசை, இடியாப்பம் சேர்ப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றமின்றி உணவு வகை பட்டியல் தயாரிப்பு.

தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகள் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை வழங்க திட்டம்.

பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழக அரசு உத்தரவு.

இதுவரை சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

* திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் இடதுபுற மற்றும் வலது புற கால்வாய் வழியாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட விவசாய பயன்பாட்டிற்கு இன்று காலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார். அணையில் இருந்து 45 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

* கோவையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதை தட்டிக்கேட்ட இளம்பெண் மற்றும் சிறுமியை நாயை விட்டு, நாய் பயிற்சியாளர் கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து நாயை கடிக்க வைத்து ரசித்த சைக்கோ பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

* தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே மினி வேனில் தனி அறை அமைத்து 350 கிலோ குட்கா பதுக்கல்!: 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி..!!

*கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே செல்போன் டவரை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகள், லோடு ஆட்டோ மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* லோக்சபாவில் திமுக எம்பிக்கள் தொடர் முழக்கம்

ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக எம்பிக்கள் தொடர் முழக்கம்

திமுக அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை

* தடுப்பூசி கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர, போட கூடாது என்று கூறவில்லை

தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசின் கொரோனா வழிகாட்டுதலை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* தமிழகத்தில் ரூ. 5,200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5% கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

12.19 லட்சம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

* ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய 624 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு;

ஜூன் 26ல் எழுத்துத் தேர்வு, மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

tnpsc.gov.in இணையதளத்தில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்
- டிஎன்பிஎஸ்சி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages