அக்னிப்புரட்சி இன்றைய (12.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 6 வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை.
* ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளத்தில் ரயில் மோதி 5 பேர் பலி.
குவாஹாத்தி சூப்பர் பாஸ்ட் ரயிலில் பழுது ஏற்பட்டதால் நடுவழியில் நின்ற ரயில்.
பழுதான ரயிலில் இருந்து இறங்கிய 5 பேர் அருகில் இருந்த தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பலி.
* நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேருங்கள்-AICTE.
உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்துக்கொள்ள உத்தரவு.
கல்லூரிகள், பல்கலை.யில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவு.
* திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி;
நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
* காணொளி காட்சி விசாரணையின்
போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்.
* ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை, எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்.
உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பேருருவெடுக்கும்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது, இதுவரை எந்த விசாரணையும் இல்லை.
தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்- பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
* தஞ்சை ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்தது கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம்.
மற்றொரு குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.12 ஆயிரம் அபராதம் விதிப்பு.
கும்பகோணத்தில் 2013 ல் செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு.
* மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய அரசிடம் பேசி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்த வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.
மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்
* சென்னை அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை சொந்தமாக்கியதை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு மேல் முறையீடு செய்திருந்தது.
* திருப்பதியில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து.
நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோயில் நிர்வாகம் நடவடிக்கை.
* அமைச்சர் எ.வ.வேலு பதிலுரை:
2001ம் ஆண்டில் 52 லட்சம் வாகனங்கள்தான் இருந்தன;
ஆனால், 2022ம் ஆண்டில் 2 கோடியே 95 லட்சம் வாகனங்கள் நிறைந்திருக்கின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை முயல் வேகத்தில் போகிற நிலையில், சாலைகளின் எண்ணிக்கை ஆமை வேகத்தில் உள்ளன.
வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை அமைக்க முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்;
சாலைப் பணிகளின் போது ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்படுகின்றன.
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம், சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சை வழங்க நடவடிக்கை;
தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை 4 வழி சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடியில் தயாரிக்கப்படும்.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை கட்டப்படும்.
சென்னை மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
1076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் சாத்தியமான இடங்களில் குறைந்த தூர பயணிகள் படகு போக்குவரத்து;
சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு.
* குளித்தலை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு மு.கருணாநிதி பெயர்; டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றம்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி என்று பெயர் மாற்றம்.
* மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவு தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டம் நடைபெறும்- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
* மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அணீஷ் சேகர்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
* ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு.
No comments:
Post a Comment