அக்னிப்புரட்சி இன்றைய (14.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.04.2022) முக்கிய செய்திகள்.

* இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:

பிறந்தது ′சுப கிருது' வருடம்.
சித்திரை முதல் நாளான இன்று 'பிலவ′ வருடம் விடைபெற்று ′சுப கிருது' புத்தாண்டு பிறந்தது.

அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

* கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் எம்.பி.க்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறை ரத்து.

எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு உட்பட அனைத்து சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்  சேர்க்கைக்கும் தடை.

மறு உத்தரவு வரும் வரை பள்ளி நிர்வாகம் தரப்பில் பரிந்துரை கடிதம் பெறக்கூடாது - கேந்திர வித்யாலயா பள்ளி.

* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் 8 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

* கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார் குரு பகவான்.

இன்று(14ம் தேதி) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.

இதையொட்டி ஆலங்குடி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.

* ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அக்கிரெட்டிகுடம் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம், மோனோமெதில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹40,000-ஐ தாண்டியது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹5006-க்கும், சவரன் ₹40,048க்கும் விற்பனை.

* சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

* ஊட்டியில் சீசன் துவங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும்  இதர வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதி.

ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி.

* உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாண வைபவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் நேரடி சாமி தரிசனம்

* சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சந்திப்பு.

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தல்.

* சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை அருகே பாஜக - விசிகவினர் இடையே மோதல்.

ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பதற்றம், தாக்குதலில் சிலர் காயம்.

* அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முழு உருவ வெண்கல சிலையை மணிமண்டபத்துக்கு வழங்கியது விசிக.

* இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்ல - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

* இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு.

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை - ஆளுநருடனான சந்திப்பு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் வருத்தத்தை அளிக்கிறது.

சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை அலட்சியப்படுத்துவதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு.

* எனக்கு தெரிந்து ஆளுநர் அளித்திருக்கக் கூடிய ஒரு தேநீர் விருந்தை மாநில அரசே புறக்கணித்திருப்பது என்பது இதுவே முதல் முறை.

இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மேலும் மதிப்பு கொடுக்கக்கூடிய செயலாக பார்க்கிறேன்- சி.பி.எம். பாலகிருஷ்ணன்.

* ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை

கடந்த 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

* கடந்த மார்ச் 20ஆம் தேதிக்கு முன்பான கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரலாம்

மே 18ஆம் தேதிக்குள் tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசு

மார்ச் 20ஆம் தேதிக்கு பிறகு நிகழும் கொரோனா இறப்புகளுக்கு அடுத்த 90 நாட்களில் நிவாரணம் கோரி விண்ணப்பிக்கலாம்

நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாவிடில் மாவட்ட வருவாய் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages