அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள்.

* மதுரை: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்.

வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து எழுந்தருளினார் கள்ளழகர் 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.

கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம்.

* பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பிற்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம், ராமநவமி அன்று, மத்திய பிரதேசம், கோவா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், ஹிந்து அமைப்புகள் ஊர்வலங்கள் நடத்தின. அவற்றில் ஒரு கும்பல் கற்களை வீசியதால் வன்முறைகள் அரங்கேறின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் குறித்து, அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், “ராஜஸ்தானின் கரோலி பகுதியில் நடந்த வன்முறையில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது,” என, பா.ஜ., தேசிய இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றஞ்சாட்டி உள்ளார்.ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது, பி.எப்.ஐ., அமைப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதேபோல், மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதி யில் நடந்த வன்முறைக்கும், பி.எப்.ஐ., அமைப்பு மீது, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.இதையடுத்து, பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இஸ்லாமிய அமைப்பான பி.எப்.ஐ.,க்கு, ஏற்கனவே பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மதுரை சித்திரை திருவிழா : வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!

* பஞ்சாப்பில் மாநிலத்தில் ஜூலை 1 முதல்  300 யூனிட் மின்சாரம் இலவசம்- பஞ்சாப் அரசு அறிவிப்பு!

* குஜராத், மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அனுமன் ஜெயந்தியையொட்டி பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் அனுமன் சிலை திறப்பு.

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும்-குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு.

* சென்னை, தலைமை செயலகத்தில் விவசாயிகள் உடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்.

கடந்த ஓராண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற 1 லட்சம் விவசாயிகளுடன் முதல்வர் உரையாடினார்.

* மதுரை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் கலந்துரையாடல்.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கண்ணபிள்ளை என்ற 1 லட்சமாவது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது -முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருப்பூரில் அதிகபட்சமாக 7,517 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் 6,906 பேருக்கும், தருமபுரியில் 6,816 பேருக்கும், திருவண்ணாமலையில் 6,527 பேருக்கும், திண்டுக்கல்லில் 5,916 பேருக்கும், கோவையில் 5,604 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 5,364 பேருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியவர் கலைஞர்.

மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்பும் கலைஞர் ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது.

புதிதாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளால் தமிழ்நாட்டில் விவசாய நிலப்பரப்பு 2.13 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மின் இணைப்பு மூலம் விவசாயிகள் பெறும் பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டு பத்திரம்.   ஓராண்டுக்குள்ளாகவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

* சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு 2.58 கோடி ரூபாய் வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. - சென்னை மாநகராட்சி

* இந்தியாவிலேயே அதிக மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு;

மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான திட்டம், இதன்மூலம் 61,18,911 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை.

உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு கரம் நீட்டிவரும் நிலையில் ரஷ்யா அறிவிப்பு.

* ஆப்கானிஸ்தான் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.

தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குனார் பகுதிகள் மீது பாகிஸ்தான் படைகள் நேற்றிரவு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும்  இத்தாக்குதலில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்.
ஆப்கான் ஊடகங்கள் செய்தி.

* பிரித்தாளும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 தலைவர்கள் கூட்டாக அறிக்கை.

உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழி ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு பிரிவினர் மக்களிடையே பிரச்சினையை தூண்டுகின்றனர்.

சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது.
வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது.

சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம் - எதிர்க்கட்சி தலைவர்கள்.

* ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்.

இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததல்ல-புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி.

அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது - தமிழிசை செளந்தரராஜன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages