அக்னிப்புரட்சி இன்றைய (18.04.2022) முக்கிய செய்திகள்.
* மேகாலய மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (வயது 18) உயிரிழந்தார்.
* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் 12 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது
சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை
கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் -முதல்வர்
* பெட்ரோல் விலையை ரூ.35க்கும் டீசல் விலையை ரூ.75க்கும் அதிரடியாக உயர்த்தியது இலங்கை அரசு.
இதனால் 303 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 338 ரூபாயாக அதிகரித்துள்ளது.
214 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வந்த 1 லிட்டர் டீசல் விலை, 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஏற்றம் காணும் தங்கம் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.40,476க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.33 உயர்ந்து ரூ.5,047க்கும், ஒரு சவரன் ரூ.40,476க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் ஒரே நாளில் 2,183 பேருக்கு கொரோனா; 214 பேர் பலி.
இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புதிதாக 2,183 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,44,280 ஆக உயர்ந்தது.
புதிதாக 214 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்தது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,985 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,10,773 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
* 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது;
மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனுக்கு இரங்கல் மற்றும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
* ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
ஒரு வாரத்துக்குள் சரணடையவும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரவு.
லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்த வழக்கில் அதிரடி.
* தேநீர் விருந்து புறக்கணிப்பு- முதல்வர் விளக்கம்:
ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?
நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும் - முதல்வர்
கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏராளமான வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல.
எல்லா வலிகளையும் அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே; அப்படித்தான் நான் செயல்படுகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது; நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார்.
ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை - அரசு பரிசீலனை.
தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விடுமுறை விட முடிவு.
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்.
* விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-முதல்வர் ஸ்டாலின்.
கார் விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* TET தேர்வு - காலக்கெடு நீட்டிப்பு:
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்.26 வரை நீட்டிப்பு - தேர்வு வாரியம் அறிவிப்பு.
மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கால அவகாசம்.
* மீண்டும் முக கவசம் கட்டாயம்.
உத்தர பிரதேசத்தில் முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது மாநில அரசு.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உ.பி. அரசு அறிவிப்பு.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது - பிரதமர் மோடி இரங்கல்.
* JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கம்.
வரும் ஜூன் 20 - 29 வரை நடைபெறவுள்ள தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை jeemain.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக 84-வது பட்டமளிப்பு விழா சன்று முன் தொடங்கியது.
விழாவில் தமிழக கவர்னர் ரவி கலந்துகொண்ட நிலையில், விழாவில் கலந்து கொள்வதாக இருந்த தமிழக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை.
* அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலுரை:
ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது, செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம.
முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும்.
அம்மா திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்திலேயே நிறுத்தி விட்டார்கள்.
274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்;10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள். 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுகோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
* மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும்- டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
திட்டத்தை வகுக்க ஏப்ரல் 25 வரை கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன - நீதிபதிகள் வருத்தம்.
* மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம்.
ரூ.412 கோடி மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கம்.
🔴 புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே நியமனம் - மத்திய அரசு
இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்!
Corps of Engineers எனப்படும் பொறியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவர் இராணுவத் தளபதி பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
தற்போதைய ராணுவ தளபதி நரவனே ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார்!
* தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்20 முதல் மே18 வரை விண்ணப்பிக்கலாம்.
* எடப்பாடி பழனிசாமியை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன்;
ஒன்று நல்ல மனிதர், மற்றொன்று சிறந்த முதலமைச்சராக இருந்தவர், இபிஎஸ் ஆட்சி பொற்கால ஆட்சி.
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தேனீபோல சுறுசுறுப்பானவர்கள். - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
* நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல்,2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு
தேர்வுநிலை, சிறப்புநிலை பேரூராட்சிகளுக்கு ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது -முதலமைச்சர் அறிவிப்பு
* தமிழ்நாட்டில் ஒரே நாளில் 27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;
26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், உயிரிழப்புகள் ஏதுமில்லை.
தற்போது 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment