அக்னிப்புரட்சி இன்றைய (22.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.04.2022) முக்கிய செய்திகள்.

* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்ட நிலையில் இன்றும் தனிப்படை விசாரிக்க உள்ளது.

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110.85க்கும், டீசல் ரூ. 100.94க்கும் விற்பனை.

* 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு.

குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் நியமனம்.

* சென்னை ஐஐடியில் இதுவரை 700 பேருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி. இதில் மாணவர்கள் 29 பேர், பணியாளர் ஒருவர்.

* தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் ஹால்டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

* மதுரை நேரு நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்;

தனியார் ஒப்பந்த உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாளர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு

* சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: "மே 8ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும்”

மே 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது

தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* டெல்லியில் உள்ள ராஸ்டிரபதி பவனில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு.

போரிஸ் ஜான்சனை வரவேற்றார் பிரதமர் மோடி.

ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி.
போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.

அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த உள்ளோம்- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - ராதாகிருஷ்ணன்.

* உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும்;
சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* 2010-ம் ஆண்டு வரை உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது

இந்நிலையில், வரும் நவம்பர் முதல் மீண்டும் ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களுடன் மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு;
இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* மலைப்பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லை;

இதை சரிசெய்ய, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் :

மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது.

தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு?-எடப்பாடி பழனிசாமி.

கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது.

சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது; இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொகுப்பிலிருந்து தேவையான நிலக்கரியை பெறாத காரணத்தினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தியதால் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்தன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தோம்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு, தற்போதும் மின்வெட்டு- எடப்பாடி பழனிசாமி.

* மின்வெட்டு விவகாரம்: மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி அளித்தது - அமைச்சர் செந்தில் பாலாஜி.

குஜராத், மஹாராஷ்டிராவில் நிலக்கரி பற்றாக்குறை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது

விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி.

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்தடை ஏற்படுகிறது.

* தமிழகம் முழுவதும் மருத்துவ மனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு!

வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக உத்தரவு!

மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்!

* தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை.

பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுவதால் விடுமுறை அறிவிப்பு.

* கொடநாடு வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு.

சென்னை தியாகராயர் நகர் வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி., நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் தலைமையில் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு.

இந்தியாவை பற்றி நன்கு அறிந்தவர் போரிஸ் ஜான்சன்.

இந்தியா, பிரிட்டன் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் போரிஸ் ஜான்சன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் இரு தரப்புக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - பிரதமர் மோடி.

* பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவை எட்டியுள்ளது.

நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை நிலக்கரி அமைச்சகம் உறுதி செய்திட உத்தரவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது; ஆனால் மின்துறை அமைச்சரும், முதலமைச்சரும் கைகாட்டுவது மத்திய அரசைத்தான்.

செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க முயல்கிறார்கள்-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க  செயற்கையான மின் தட்டுபாட்டை உருவாக்கிறார்கள்;

ஆனால், மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

போதிய அளவில் நிலக்கிரி கையிருப்பு உள்ளது, மற்ற மாநிலங்களில் இதுபோன்ற மின்வெட்டு கிடையாது.

* சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்

வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

வாகன சோதனையின்போது கத்தி, கஞ்சா வைத்திருந்ததாக விக்னேஷ் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விக்னேஷ் உயிரிழப்பு

* தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா:

தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; உயிரிழப்பு ஏதும் இல்லை; 27 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர் (நேற்றைய பாதிப்பு 39)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages