அக்னிப்புரட்சி இன்றைய (26.04.2022) முக்கிய செய்திகள்.
* திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது - கோவில் நிர்வாகம்.
* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது; 20 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* Twitter நிறுவனத்தை வாங்கினார் Elon Musk எலான் மஸ்கின் டீலை ஏற்றுக்கொண்ட ட்விட்டர்.
உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியானது.
திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.3.36 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் இறுதியானது.
ட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, முன்னெப்போதும் இருந்ததை விட சிறப்பாக்கப் போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு.
* தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும்
* பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது. உத்தரவை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர்
* காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்;
வழக்கினை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
* மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவு.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் விபத்துக்குள்ளானதில் உ.பி-ஐ சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.
* கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்- 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
* தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளையாட்டு சங்கங்களின் செயல்பாடு குறித்து தனி நீதிபதி வகுத்த விதிமுறைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
* தங்கம் விலை 2 நாட்களில் ரூ.512 குறைவு.
தங்கம் விலை நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 248 குறைந்து 39,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 70.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* 6 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்
சென்னையில் உயிரிழந்த விசாராணைக் கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், ஓட்டுநர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
* சென்னை, புரசைவாக்கம் காவல்நிலையத்தில் விக்னேஷ் உயிரிழப்பு தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
சென்னை, புரசைவாக்கம் காவல்நிலையத்தில் விக்னேஷ் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.
விக்னேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச்சு.
கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ், காவல்துறை விசாரணைக்கு வர மறுத்தார். விக்னேஷ் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விக்னேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விக்னேஷ்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.
* காங்கிரசில் சேர மறுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்.
காங்கிரசுக்கு என்னை விட தலைமையே தேவை.
காங்கிரசில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் - பிரசாந்த் கிஷோர்.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு.
தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும்.
24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ16.67 கோடி கூடுதல் செலவாகும்-சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
* கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000 லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்படும்.
விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
- பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு.
விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி.
2014 முதல் 2022 வரை நிலுவையில் சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேங்மேன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி.
No comments:
Post a Comment