அக்னிப்புரட்சி இன்றைய (03.05.2022) முக்கிய செய்திகள்.
* ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்.
இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி வழிபாடு.
* வீட்டின் மேற்கூரை இடிந்து கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு.
தூத்துக்குடி: அண்ணா நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி கார்த்திகா, தாய் காளியம்மாள் உயிரிழப்பு.
கடந்தவாரம் வளைகாப்பு நடத்தி அழைத்துவந்த நிலையில் 50 ஆண்டு ஆன கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்தது.
* பஞ்சு, நூல் ஆகியவற்றை அத்தியாவசிய தேவை பட்டியலில் சேர்க்கக்கோரி மே 16 முதல் 21 வரை திருப்பூரில் பொது வேலைநிறுத்தம் -பின்னலாடை தொழில் நிறுவனங்கள் அறிவிப்பு
* அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மைவாதம், மதவாதம் தலைதூக்காத சமய நல்லிணக்க பூங்காவாக காக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை.
பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது - மின்சார வாரியம்.
பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும்; பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு.
* மதுரை மருத்துவ கல்லூரி விவகாரம்; தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல்.
உடனடியாக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீண்டும் கல்லூரி முதல்வராக ஏ.ரத்தினவேலை நியமிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்.
* தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்- மதுரை ஆதீனம்.
உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்.
எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்- மதுரை ஆதீனம்.
* மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்துவிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்?- தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கேள்வி.
மாணவர்களை போதையின் பிடியிலிருந்து மீட்க மதுக்கடைகளை மூட வேண்டும், புகையிலைக்கு தடை விதிக்க வேண்டும்.
* வழக்கில் கைதானவர்களை இரவில் விசாரணை நடத்தக்கூடாது - டிஜிபி சைலேந்திரபாபு.
கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.
இரவு நேர கஸ்டடி விசாரணை கூடாது - அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சுற்றறிக்கை.
* நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் முடிந்த நிதியுதவியை இலங்கையில் வாழும் மக்களுக்கு வழங்கிடுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை: தலைமைச் செயலக கிளை, சென்னை – 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு: IOBA0001172
* இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ₹1 கோடி நிதி வழங்கப்படும் - திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
* 10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும்.
தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்வறையில் முகக்கவசம் அணிவதா? வேண்டாமா? என தொடர்ச்சியாக கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு விளக்கம்.
* “புரூட் மிக்ஸ்" குடித்த கூலித் தொழிலாளிகளுக்கு வாந்தி, மயக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் உட்பட 18 பேர் வாந்தி மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி.
உள்ளூர் கடையில் ‘புரூட் மிக்ஸ்’ வாங்கி குடித்த 24 பேரில் 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூஸ் கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை.
* 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டிற்கு தேர்வெழுத தடை; ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வெழுத வாழ்நாள் தடை - அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை.
பொதுத்தேர்வு மைய வளாகத்துக்குள் ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை; மீறினால் கடும் நடவடிக்கை” - அரசு தேர்வுகள் இயக்குநர்.
* திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்; ஏழுமலையானை தரிசிக்க 20 அறைகளில் காத்திருப்பு.
பல்வேறு மாநிலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று அதிகாலை முதல் இரவு வரை 65,756 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,774 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் ₹4.60 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 20 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment