அக்னிப்புரட்சி இன்றைய (06.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.05.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் தொடர்ந்து 30வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.85-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.100.94-க்கும் விற்பனை.

* அமெரிக்காவில் ஒரே நாளில் 66,611 பேருக்கு கொரோனா தொற்று; 225 பேர் உயிரிழப்பு

* தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெறுகிறது; புதுச்சேரி உட்பட 4,092 மையங்களில் 9.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

* மத்திய சீன தலைநகரான ஹுனானில் ஏற்பட்ட கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு; 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

* புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.

ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதி.

* ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதி.

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை படிக்கலாம் - யுஜிசி.

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு.

தஞ்சை: ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.

பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

* தருமபுரம் ஆதீனத்தில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூக முடிவு.

நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்.

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நடக்க பேச்சுவார்த்தை நடக்கிறது -இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9.55 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
3,936 தேர்வு மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கோரிக்கை.

* சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்:

சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் மனித உரிமை ஆணையம் உத்தரவு.

* சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* கள்ளக்காதலனை காப்பாற்ற பொய் சாட்சி கூறிய பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில், மகளிடம் தவறாக நடந்து கொண்ட கள்ளக்காதலனை காப்பாற்ற  நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, அபிராமியின் 13 வயது மகளிடம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார், ஜார்ஜ் பெர்ணான்டஸை கைது செய்தனர்.

இது தொடர்பான விசாரணையின் போது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாள்தோறும் குடித்து விட்டு துன்புறுத்தியதால், அவர் மீது பொய் புகார் அளித்ததாக, அபிராமி தெரிவித்தார்.

இது பற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காப்பாற்ற அபிராமி முயன்றது தெரியவந்தது.

இதன்படி, அபிராமியை போக்சோ வழக்கில் கைது செய்ய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

* கேவிக்னேஷ் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்- அதிமுக.

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது.

உடலில் 13 இடங்களில் காயம் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

விசாரணை கைதி மரணம்: சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு விசாரணை; 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம்-முதல்வர் விளக்கம்.

விசாரணை கைதி மரணம் தொடர்பாக  சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு  3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் -பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர் கொலை சம்பவங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

* சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு.

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

* ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மயக்கம்: கிரீன் லீப் ஓட்டலுக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான குழு சோதனை செய்தபோது உரிமம் பெறாதது கண்டுபிடிப்பு.

* தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது -ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு.

சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார்.

மாணவர்கள், மனித உரிமை இயக்கங்கள் போல் முகமூடி அணிந்து இயங்கி வருகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று கருத்து தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் விமர்சனம் செய்தார். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது என்று ஆளுநர் ரவி கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

* கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததே என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

* புதுச்சேரி நகராட்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் ஆயிரக்கணக்கான பேனர்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக வைத்த பேனர்களை 2 வாரங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வங்கக்கடலில் உருவாகின்றது புயல்:
தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறக் கூடும்.

மே 10ம் தேதி ஆந்திரா - ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதியில் புயல் மையம் கொள்ளும் என கணிப்பு -சென்னை வானிலை மையம்.

* ஆதிதிராவிடர் மானியம் சம்மந்தமான சட்டமன்றத்தில் -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில உரை

தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் வழங்கப்படும்
200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு.

90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ₹50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ₹50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும்.

கடந்த மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3 அறிவிப்புகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 1 முதல் 9-ம் வகுப்பு வரை  மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் -பள்ளிக்கல்வித்துறை.

* சென்னையில் பல அம்மா உணவகங்கள் செயல்படாமல் உள்ளன
என்னுடன் வாருங்கள் நானே கூட்டிச் சென்று அவற்றை காட்டுகிறேன் 
- சென்னை மேயர் பிரியா

* தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்கிட அரசு உறுதி செய்ய வேண்டும்  - சட்டப்பேரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் பாபு கோரிக்கை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages