அக்னிப்புரட்சி இன்றைய (07.05.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் 31 நாட்களாக இன்றும் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* சமயல் எரிவாயு சிலிண்டர் விலை ₹1,000-ஐ தாண்டியது.
14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்வு.
விலை உயர்வை தொடர்ந்து புதிய விலை ₹1015.50-ஆக உள்ளது.
* சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது.
காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் கைது.
ஏற்கனவே 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 காவலர்களும் கைது.
கடந்த 19-ம் தேதி விசாரணை கைதி விக்னேஷ் தலைமை செயலக காலணி போலீசார் விசாரணையில் உயிரிழந்தார்.
* சான்றிதழ் கட்டணம் 10 மடங்கு உயர்வு-அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை.
Grade, Mark sheet தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்வு.
Degree சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்வு.
2-வது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம்.
23 வகையான சான்றிதழ்களுக்கு கட்டண உயர்வு அமலானது.
கடந்த 1-ம் தேதி முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
* திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு;
2ம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
இது மக்களின் அரசு; மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அரசு,
நூறாண்டு கால 'திராவிட மாடல்’ வளர்ச்சியை ஓராண்டு காலத்தில் மீட்டெடுத்து, லட்சிய பாதையில் தலைநிமிர்ந்து பயணிக்கின்ற தமிழ் அரசு.
இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என்பதை விட இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியதாகும்; அதற்கான உழைப்பு தொடரும்.
இடர்பாடுகளை நீக்கி வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி, திமுகவின் ஓராண்டு ஆட்சி.
முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை எனவும் ஓபிஎஸ் விமர்சனம்.
திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
பெட்ரோல் - டீசல் விலை, 7 பேர் விடுதலை, பூரண மதுவிலக்கு குறித்து தற்போது பேசாதிருப்பது ஏன்? - ஓபிஎஸ்
திமுக ஆட்சியின் ஓராண்டில் மக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்- ஓ.பன்னீர்செல்வம்.
* அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்.
இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம் - முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன்.
ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கலைஞர் அல்ல, அவரை போல் எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் அவரை போல் உழைக்க தெரியும்.
அரசு திட்டங்களின் பயன்கள் சென்று சேராத இடமே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
106.34 கோடி பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகியுள்ளது; இதுவே அரசின் உண்மையான சாதனை.
இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும்.
முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை.
தகைசால் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஓராண்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக திமுக பொய் விளம்பரம் செய்கிறது.
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* தி.மு.க., ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு புதிய திட்டங்கள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
1),காலை சிற்றுண்டி திட்டம்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தாண சிற்றுண்டி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்த திட்டம், பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.
2), சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்;
ஊட்டச்சத்து இல்லாத குறைபாடு தமிழகத்தை நோக்கத்தோடு உருவாக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பரிசோதனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை, தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியுடன், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.
3), தகைசால் பள்ளிகள் திட்டம்:
டில்லியில் உள்ளது போல், தமிழகத்திலும் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும். மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.150 கோடி மதிப்பில் அனைத்து கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடு ஊக்கப்படுத்தும் நேரத்தில், அவர்களின் கலை, எழுத்து, உள்ளிட்ட திறமைகள் மேம்படுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வகை திறன்களை கொண்டு வந்து ஆளுமை திறன் மேம்படுத்தப்படும். தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
4), நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் திட்டம்:
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளது போல், நகர்ப்புறங்களிலும் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படம். 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளிலும் 180 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடத்தில் 708 மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மதியம் 4 முதல் இரவு 8 மணி வரையிலும், புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வகையில், டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
5), உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்:
சட்டசபை தேர்தலுக்கு முன்பு அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் மனுக்களை பெற்று, ஆட்சி அமைத்த பிறகு, அந்த மனுக்களை பரிசீலனை செய்ய தனித்துறை உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் வர உள்ளது. நிறைவேற்றப்படாத அவசிய தேவைகள் குறித்து எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை அடிப்படையில் கலெக்டர் பரிசீலனை செய்வார்கள். இதில் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்குவோம். முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் குறித்த பட்டியலை எம்.எல்.ஏ.,க்கள், சம்பந்தப்படட மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம். அதில், முக்கிய திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டம் நேரடியாக எனது கண்காணிப்பில் நடக்கும். கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எடப்பாடி அல்லது போடி தொகுதியாக இருந்தாலும் சமமாக நடத்தப்படும்.
* Bike Taxi உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்த தமிழகத்தில் அனுமதி இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில்
* திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியீடு
* மே.9 ல் தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.
மே 9ம் தேதி தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பல்வேறு வழித்தடங்களில் நீட்டிக்க ஆய்வு பணி
சிறுசேரி வரை திட்டமிடப்பட்டுள்ளதை
கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை
பூந்தமல்லி புறவழிச்சாலை - ஸ்ரீபெரும்புதூர் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு.
* தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது, புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 செலவாகிறது;
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது
- அமைச்சர் பிடிஆர்
* அண்ணா பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் கட்டண உயர்வு கந்துவட்டி வணிகத்திற்கு ஒப்பானது, கண்டிக்கத்தக்கது;
இது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
* TNPSC, TRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
* மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் - மருத்துவமனையில் உயிரிழப்பு.
கடலூர் : திட்டக்குடி அருகே ராமநத்ததில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு.
மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
* பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை!
தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ₹2 லட்சம் செலவாகிறது; புதிய ஓய்வூதியத் திட்டதில் ₹50,000 தான் செலவாகிறது
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
* நாளை மாலை அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதை அடுத்து, எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி சென்னை மெரினா கடற்கரையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம்.
‘திராவிட மாடல்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment