அக்னிப்புரட்சி இன்றைய (08.05.2022) முக்கிய செய்திகள்.
* ராமேஸ்வரம் அடுத்துள்ள மரைக்காயர் பட்டினத்தில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
* வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மே 10ல் ’அசானி’ புயல் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி புயல் நகரும் என தகவல். - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
* பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி.
நேற்று பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் தகவல்.
* பொதுமக்கள் ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுரை
நீட் விவகாரம்: மாணவர்களின் வயிற்று எரிச்சல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சும்மா விடாது”
* காங்கிரஸ் சார்பில், இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம்- முதலமைச்சரை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
* சென்னை மயிலாப்பூரில் ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மனைவி அனுராதவை கொலை செய்த அவரது கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி கைது.
5 கோடி மதிப்பிலான தங்க வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
* சென்னை, கடலூர், நாகை உட்பட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
வங்கக் கடலில் 'அசானி' புயல் உருவானதை குறிக்கும் விதமாக 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்.
மயிலாடுதுறை: தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
பட்டின பிரவேச நிகழ்ச்சியில் தரும்புர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை என ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஆணையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு.
* பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருந்த 67வது தொடக்க நிலை போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்தது
தேர்வு நடைபெறுவதற்கு சில மணி நேரத்தில் தேர்வை ஒத்திவைத்து தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளித்த #BPSC
* தமிழ்நாட்டிற்கு நடுவண் பாஜக அரசு ஓரவஞ்சனை செய்வதாக பொய்யாக பரப்புரை மேற்கொள்ளாதீர்கள்!
எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் மோடி ஆட்சி.
சில பேருக்கு கொடுத்துட்டு, சில பேருக்கு கொடுக்காம இருப்பது 'திராவிட மாடல்' ஆட்சியாக இருக்கலாம்! - சென்னையில் துக்ளக் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
* திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
No comments:
Post a Comment