அக்னிப்புரட்சி இன்றைய (10.05.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது
* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
3,119 மையங்களில் 8.85 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.
* தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
ஏப்ரல் 6ல் தொடங்கிய கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது.
இறுதி நாளான இன்று காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை நடைபெறுகின்றது.
* அனைத்து கட்சி கூட்டத்திற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்
அரசியல் கட்சிகளை சாராத ஒருவர் புதிய பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
* மொகாலியில் உள்ள பஞ்சாப் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு
நிகழ்வு குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த மன் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்
* சென்னையில் கொல்லப்பட்ட ஆடிட்டர் தம்பதியின் தலையில் மண்வெட்டியால் வெட்டிய காயம் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
* நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசியதில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூரைகள் சேதம்
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் செல்லும் 10 விமானங்கள் ரத்து
* தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* குழந்தை பிறந்து இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு.
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும், பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அரசு ஊழியர்களுக்கு 365 நாள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்.
* இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே.
மகிந்த ராஜபக்சே சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
* இலங்கையில் நடந்த வன்முறையில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய போதும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் வெடித்த வன்முறை.
* சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.
கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
* கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டே அமைக்கப்படும்.
* சென்னையில் புதிதாக 700 நகர்ப்புற மருத்துவமனை தொடங்கப்படும்.
வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
உச்ச நீதிமன்றத்தில் சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு இடிப்பு வழக்கு: ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைகோரிய மனு தள்ளுபடி.
சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை- நீதிபதிகள்.
ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியிருந்தால் அதை சம்மந்தப்பட்ட நபர்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு விஷயங்களில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும் - நீதிபதிகள்.
ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது - தமிழக அரசு.
* எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.- முதல்வர் ஸ்டாலின்.
அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை.
காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை - உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை.
ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்; காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை.
காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்.
உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும்; சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்.
தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* நமல் ராஜபக்சேவின் மனைவி
தப்பியோடும் காட்சி வெளியீடு.
ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திருமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாக தகவல்.
ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
3000 புதிய காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.
காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹30 லட்சத்தில் இருந்து ₹60 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ₹1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க "பருந்து" என்ற செயலி ₹33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து "போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக" சீரமைக்கப்படும்.
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் இனி காவல்நிலையம் வரவேண்டியதில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
ரூ.6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும்.
காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும்- சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சமூக ஊடகங்களை கண்காணிக்க சமூக ஊடக மையம் அமைக்கப்படும்.
திருவாரூர் முத்துப்பேட்டையில் ரூ12 கோடி செலவில் பயிற்சி காவலர்களுக்கான இல்லம் கட்டப்படும்.
சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் வீரர்களுக்கு இடர் படி உயர்த்தி வழங்கப்படும்.
* சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு :
ஒரு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொண்டார் சபாநாயகர் அப்பாவு.
அவர் உருவத்தால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் உயர்ந்தவர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் சபாநாயகர் வார்த்தைகளால் வழிநடத்தினார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவில் பேச வாய்ப்பு தரப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
அது எனக்கு மன நிம்மதியை தருகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.
தொடரில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
* இலங்கை மேற்கு பிராந்தியத்தில் உள்ள மல்வானையில் பசில் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என கருதப்படும் வீடு போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது
#lka | #SriLankaEconomicCrisis | #SriLankaProtests
* புதிய முதலீடுகளுக்கு ஏற்ப உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதியை அதிகரிக்க தடையில்லா மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சென்னையில் வர்த்தக துறை சார்பில் நடைபெறும், ஏற்றுமதியாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
* கி.வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்குப் பதிய உத்தரவு:
இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.
பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சென்னை காவல்துறைக்கு ஆணை.
* அனைத்து மக்களும் வன்முறையை கைவிட்டு அமைதிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் சூழலை இயல்புநிலைக்கு திருப்ப எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ட்வீட்.
* இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!
இலங்கையில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும் கண்டதும் சுட ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு.
இலங்கையில் தலைவிரித்தாடும் கலவரம் மற்றும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் அதிரடி நடவடிக்கை.
No comments:
Post a Comment