அக்னிப்புரட்சி இன்றைய (12.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.05.2022) முக்கிய செய்திகள்.

* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடக்கம்.

ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

* இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் - இலங்கை அரசு.

* மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனத்தில் குரு முதல்வர் குருபூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் பட்டின பிரவேச திருவிழாவில் 18ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

22 ஆம் தேதி ஆதீனத்தின் பல்லக்கு வீதி உலா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

* சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு.

முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவினரை தீட்சிதர்கள் அனுமதிக்காத நிலையில் அமைச்சர் அறிவிப்பு.

* கருத்துச் சுதந்திரத்தை தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதித்து பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது  நியாயமற்றது - மருத்துவர் இராமதாசு அய்யா

* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்.

வேளாண்மைக்கு திமுக அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் கூட்டம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது.

காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகிறோம்.

வேளாண்மைக்கு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்-முதலமைச்சர் ஸ்டாலின்.

* புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

வரும் 15ஆம் தேதியில் இருந்து ராஜீவ் குமார் பொறுப்பேற்பார் என அறிவிப்பு.
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வரும் 14ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய ஆணையர் நியமனம்.

* தமிழகத்தில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை-உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு.

TANCET தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை அறிவிப்பு.

* சமஸ்கிருதம், போஜ்புரி,அசாமிய உள்ளிட்ட மேலும் 24 மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மற்றும் கூகுள் தேடல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. - சுந்தர் பிச்சை அறிவிப்பு.

* கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை மீண்டும் திறக்க உத்தரவு.

மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 25ஆம் தேதி கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.

மாணவர்கள் போராட்டம் ஓய்ந்த நிலையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க அண்ணாமலை பல்கலை.பதிவாளர் உத்தரவு.

* பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் 16ம் தேதி நேபாளம் பயணம்
புத்தா பூர்ணிமா நிகழ்வை முன்னிட்டு நேபாளம் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பயணம்.

* பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்திற்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு.

தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்  - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்கு புரிய வைப்பது நீதி வழங்கல் துறையின் கடமை

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பவித்ரா வன்னியராச்சி உட்பட 14 பேருக்கு வெளிநாடு செல்ல தடை - கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு.

* தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம்.

தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு.

பொதுநல வழக்குகளின் நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்படிருப்பதாக கூறி வழக்கு தள்ளுபடி; மனுதாரருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்.

* போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும்- அமைச்சர் சிவசங்கர்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்.

* ஆம்பூரில் நாளை தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா  தற்காலிக ரத்து.

பிரியாணி திருவிழாவை நிறுத்தக் கோரி இந்து முன்னணியினர் மனு அளித்திருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

* நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79%-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்.

மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், தற்போது 0.84% உயர்ந்து 7.79 ஆக அதிகரிப்பு.

* விக்ரம் திரைப்படத்தில் வரும் "பத்தலே பத்தலே" என்ற பாடலில் சில வரிகளை நீக்க வலியுறுத்தி மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா்.

மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையிலும், சாதி ரீதியிலான பிரச்னைகளை தூண்டும் வகையிலும் பாடல் வரிகள் அமைந்துள்ளதாக புகார்.

* அரிசி, பால் பவுடர் என இலங்கை மக்களுக்காக தயாராகும் பொருட்கள்
வரும் 22ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து  இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன

* இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே.

ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர் ரணில் விக்ரமசிங்கே.

புதிதாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுன கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு ஒரு மாதம் கூட நீடிக்காது என ஜே.வி.பி. கட்சி விமர்சனம்.

பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

* கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தலே பத்தலே' என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க வேண்டும்- மனு.

* இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றும் நான் முதல்வன் திட்டம் - திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு.

* மே 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.

* இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல் ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியின் பாதுகாப்பை தீவிரப் படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பகுதியிலிருந்து அகதிகள் மற்றும் அகதிகள் போர்வையில் சிறையிலிருந்து தப்பிய கைதிகள், மர்ம நபர்கள் யாரும் வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னையில் உள்ள இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக கப்பல்கள் ராமேசுவரம் முதல் தொண்டி வரையிலான இந்திய கடல் எல்லை கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதைத் தவிர மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், ஒரு அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர உச்சிப்புளி இந்திய கடற்படை விமான தளத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தாழ்வாக பறந்த படி கடலுக்குள் சந்தேகப்படும்படியான படகுகள் ஏதும் வருகின்றதா என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதுபோல் மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்களிடமும் கடலுக்குள் சந்தேகப்படும்படியான நபர்களையோ, புதிய படகுகளையும் கண்டால் உடனடியாக கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மீனவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages