அக்னிப்புரட்சி இன்றைய (20.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.05.2022) முக்கிய செய்திகள்.

* பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

டெல்லி, பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை.

லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் சிபிஐ போலீசார் சோதனை.

* நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

இன்று இரவு 9 மணி வரை மட்டுமே விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம்.

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது-சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

* ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார். மலர்க் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும்.

* சேலத்தில் குரும்பப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஆயுதங்கள் தயாரித்ததாக 2 இளைஞர்கள் கைது.

ரகசிய தகவலை அடுத்து இளைஞர்களை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்.

நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.

* விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு.

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு.

* ஹைதராபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டர் போலியானது என உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் நால்வரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்

சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், மூவர் மைனர்கள். நால்வரும் வேண்டும் என்றே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உச்ச நீதிமன்றம் அமைத்த ஆணையம் அறிக்கை.

இது என்கவுண்டர் வழக்கு, உயர் நீதிமன்றத்திற்கு இதன் விசாரணையை அனுப்புகிறோம் - தலைமை நீதிபதி அமர்வு.

* நெல்லை கல்குவாரி உரிமையாளர் மகனுடன் கைது.

நெல்லை கல் குவாரி விபத்தில் குவாரி உரிமையாளர் செல்வராஜ், மகன் குமார் மங்களூரில் போலீசாரால் கைது.

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினர் மட்டும் வேத பாராயணம் பாட அனுமதித்த உதவி ஆணையர் உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.

காஞ்சிபுரம் கோயில் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று இதே அமர்வு முன்பு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவு.

இரு நீதிபதிகள் அமர்வின் இன்றைய உத்தரவு மூலம் தென்கலை மற்றும் வடகலை என இரு தரப்பினரும் வேத பாராயணம் பாட முடியாத நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages