அக்னிப்புரட்சி இன்றைய (21.05.2022) முக்கிய செய்திகள்.
* தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் மழை காரணமாக வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி!
தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை!
* காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது.
உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள், சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்- டிஜிபி சைலேந்திரபாபு.
குற்றவாளிகளை காவலர்கள் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்கு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம். தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்றுள்ளனர்.
அவர்களை கொண்டு காவல் நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும்- டிஜிபி சைலேந்திரபாபு.
* தமிழகத்தில் ஓமிக்ரான் பிஏ 4 கொரோனா பரவியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் புதிய வகை கொரோனா பரவியது கண்டுபிடிப்பு
புதிய வகை கொரோனா பரவும் தன்மை கொண்டது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
* உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் முதல் ஆட்சியராக இருந்தவர்.
* முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் - பிரதமர் மோடி அஞ்சலி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை.
* என் தந்தை, இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர்.
எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை.
“I daerly miss him" - ராகுல் காந்தி
* உதகை நகரின் 200-வது ஆண்டு விழா - பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ரூ.118.79 கோடி மதிப்பீட்டில் அரசு திட்டங்களை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நான் முதலமைச்சரான பிறகு உதகையில் முதன் முறையாக நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
யுனெஸ்கோ அமைப்பு நீலகிரி மாவட்டத்தை உயிர்கொள் காப்பகமாக அறிவித்துள்ளது.
உதகை மக்கள் அளித்த வரவேற்பு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
உதகையை போலவே எனது உள்ளமும் குளிர்ந்துள்ளது.
நீலகிரியில் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என மிகப்பெரும் விழாவாக நடக்கிறது.
திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முதுமலை சரணாலயத்தை விரிவுப்படுத்தி, மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தந்தது கலைஞர்.
ரூ.34 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
உதகையில் தான் கலைஞர் பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் நாட்டுடமை ஆக்கி அறிவித்தார். நீலகிரி ஏரியை சீரமைத்ததும் கலைஞர் தான்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கியதும் கலைஞர் தான். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கடை உரிமை பெயர் மாற்றம் செய்து நீட்டிப்பு செய்ய அனுமதி தந்தேன்.
உதகையில் 3வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வந்தது திமுக ஆட்சி தான்.
நீலகிரி மாவட்டத்திற்கு தேவையானதை எப்போதும் செய்து தர தயாராக இருப்பது திமுக அரசு.
2019ல் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்தோரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.
ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்காக பணியாற்றிய மாபெரும் இயக்கம் தான் திமுக.
இயற்கையும், மனிதனும் இணைந்து வாழும் வனப்பகுதியை காக்க அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து சிறப்பான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது.
உதகையின் வனப்பரப்பை அதிகரிக்க திமுக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வனப்பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம், சுற்றுசூழல் வளாகம், ஏற்படுத்தப்படும்.
அந்நிய தாவரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன- முதல்வர் ஸ்டாலின்.
* விழிப்புணர்வு பதிவு:-
கூடுதல் மொபைல் டேட்டா பலன்களைப் பெற ஏதேனும் இணைப்பைக் கிளிக் செய்யும்படி மோசடி செய்திகள் வருவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். OTPகள் மற்றும் பிற நிதித் தகவல்கள் போன்ற ரகசியத் தகவல்களைத் திருட, மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தைப் பிரதிபலிக்கலாம். PIN, கடவுச்சொல், OTP, உள்நுழைவு ஐடி, டெபிட்/கிரெடிட் கார்டு எண், CVV, காலாவதி தேதி போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
* மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் - முதல்வர்.
*:இன்று 5,529 பணியிடங்களுக்கான தேர்வுக்கு 9.94 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட்; 11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர் - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன்
* ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா?- நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் அவர்
ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான்.
ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.
ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம்-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
* சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை.
யார் தியாகி, தியாகி இல்லை என்று அவர் தெரிவிக்கக் கூடாது- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
துடுக்குத்தனமாக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும்.
சீருவது போல வாய திறக்கலாம். சீற்றம் வராது காற்றுதான் வரும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்?
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
* கோவை துடியலூரில் புதரில் பந்து எடுக்கச் சென்ற போது பாம்பு கடித்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு
திண்டுக்கலைச் சேர்ந்த மணிவேல் என்ற சிறுவன், கோடை விடுமுறைக்காக தனது தாத்தா வீட்டுக்கு வந்திருந்தபோது துயரம்
* பெட்ரோல், டீசல் விலை குறைப்பு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!.
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8 குறைப்பு.
டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு காஸ் சிலிண்டருக்கு ரூ.200 வரை மானியம் அளிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
* பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறையும்?
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைவு
உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும்;
சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை.
இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும்.
சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும்.
சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
* பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதாக கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் பெட்ரோல் மீதான வரி ரூ.2.41 மற்றும் டீசல் ரூ.1.36 குறைப்பு
No comments:
Post a Comment