அக்னிப்புரட்சி இன்றைய (31.05.2022) முக்கிய செய்திகள்.
* முன்னாள் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, சென்னையில் உள்ள வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்திற்கு மாற்றம்
* மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த திருமதி ரமணி, அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமியை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
* தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தல்.
* தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம்.
* பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது. UGC அறிவிப்பு.
* குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தற்போது வரை 24 நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு.
* மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ₨86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₨9,602 கோடியை விடுவித்தது மத்திய அரசு.
No comments:
Post a Comment