அய்யா தாத்தாவிடம் வாழ்த்து வாங்க வந்ததா பாம்புக் குட்டி? குழந்தை வெண்மதியும் கேட் கேள்வி?.
தைலாபுரம் தோட்டத்தில் இழுவை ஊர்தி ஓட்டுபவராக பணியாற்றி வருபவர் மணி. அவரது மூன்றரை வயது மகள் வெண்மதி. அந்தக் குழந்தை என்னிடம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும்.
இரு நாட்களுக்கு முன் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் எனது இருக்கையில் நான் அமரப் போகும் முன் அங்கு ஒரு குட்டிப் பாம்பு வந்ததை எனது உதவியாளர் தண்டபாணி பார்த்து விட்டார். உடனடியாக அந்த பாம்புக்குட்டி வெளியேற்றப்பட்டு விட்டது. அதன்பிறகே அந்த பாம்பு நீக்கத்தான் குட்டி பாம்பு (தண்ணீர் பாம்பு குட்டி) என்று தெரியவந்தது. இந்த நிகழ்வுகளையெல்லாம் குழந்தை வெண்மதியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த நிகழ்வு குறித்து தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் வெண்மதி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
‘ அந்த பாம்பு ஏன் அய்யா தாத்தாவிடம் வந்தது. ஒருவேளை ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்திருக்குமோ?” என்பது தான்.
குழந்தைகள் உலகமும், சிந்தனையும் நம்மால் கணிக்க முடியாதவை.
No comments:
Post a Comment