அக்னிப்புரட்சி இன்றைய (01.06.2022) முக்கிய செய்திகள்.
* பிரபல பாடகர் கேகே (கிருஷ்ணகுமார்) மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொல்காத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழில் உயிரின் உயிரே (காக்க காக்க), அப்படி போடு (கில்லி) உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் கேகே.
* பிரெஞ்ச் ஓபன் தொடர் அரையிறுதியில் ரஃபேல் நடால்.
உலகின் நம்பர்-1 வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் தொடரில் 13 முறை ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
* அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்திய பிறகு நேற்று ஒரேநாளில் 7,000 அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வு.
கடந்த அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி கடந்த 2020 மே மாதம் அறிவிக்கப்பட்டது.
மீண்டும் 2021ம் ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59ல் இருந்து 60ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
2020 மே மாதம் 31ம் தேதியுடன் ஓய்வுபெறும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு மொத்தமாக ஓய்வுபெற உள்ளனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
வரும் சில மாதங்களில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் வரை உயரும் நிலை உள்ளது.
* பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சியாக அவசர முன்பதிவுக்கு ரூ 5,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை.
முதற்கட்டமாக அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
அவசர கால ஆவணப் பதிவிற்கான முன்பதிவு தட்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகம்.
* வணிக சிலிண்டர் விலை குறைப்பு.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ₨135 குறைந்து ரூ.2,373க்கு விற்பனை.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
* வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்"
வைகை எக்ஸ்பிரஸ் தேனி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்; அப்படி எந்த அறிவிப்பையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை, தவறான தகவல்களை பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-மதுரை ரயில்வே கோட்டம்.
* சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையம்:
ரூ.350 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை அமைக்க நடவடிக்கை.
23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய ரயில் நிலைய மாதிரிப் புகைப்படத்தை வெளியிட்டார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
* புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு
* கே.கே. உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கொல்கத்தாவில் மரணமடைந்த பாடகர் கே.கே.வின் உடலுக்கு, விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அறிவிப்பு
* கேரளாவில் 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது - நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
* சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு
* தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து 19 துறைகளின் செயலாளர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
* பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது - சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன
பிளஸ் 1 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 9ம் தேதி தொடங்குகிறது
* மணப்பாறையில் காதலிக்க மறுத்து சிறைக்கு அனுப்பிய 11-ம் வகுப்பு மாணவியை 14 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிய கேசவன் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு.
* நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
* மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும்.
தாமதமான திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும் - அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்
துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும்
துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
* ஆரணி அசைவ உணவகத்தில் பிரியாணி, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
* சசிகலா பாஜகவில் இணைவது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து
- சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
No comments:
Post a Comment