அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2022) முக்கிய செய்திகள்.

* பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம்.

மொத்தமாக ரூ. 68.62 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை முடக்கம்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

* அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது

ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை

அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம்  - அதிமுக தலைமை

* சென்னையில் நாளை மலர் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி 5ம் தேதி வரை நடக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சியை ரூ 50 கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும்.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், குழுவின் உறுப்பினர் செயலராக நியமனம்.

ஒரு வருட காலத்தில் கல்விக்கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க அரசாணை.

* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்.

* இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து.

இளையராஜா 80வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் தொலைபேசி மூலம் வாழ்த்து.

* தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

* மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது. - நாளை முதலமைச்சர் வழங்குகிறார்.

பத்திரிகைத் துறையில் ஏறத்தாழ 70 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன்.

வெகுமக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டை தீர்மானித்தவர்களில் ஒருவர் சண்முகநாதன்.- தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages