அக்னிப்புரட்சி இன்றைய (09.06.2022) முக்கிய செய்திகள்.
* வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
* சென்னையில் 4 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை.
மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை.
* கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்;
பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை கடைப்பிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்
* மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
* மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு.
கட்டுமானம் தொடங்கி மழைநீர் வடிகாலில் நீர் முறையாக செல்வது வரை உறுதி செய்ய செய்யவேண்டும் -மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை.
* சென்னை, தலைமை செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் பாரத்நெட் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.1,627.83 கோடி மதிப்பிலான பாரத்நெட் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சியில் கண்ணாடி இழை கம்பி பதிக்கும் பணி தொடக்கம்.
* அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர்.
பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.
* குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
ஜூன் 29ம் தேதி வேட்புமனு தாக்கல்.
ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,809 பேர் வாக்காளர்களாக உள்ளனர் (776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்கள்)
776 எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,700.
4,033 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231- இந்திய தேர்தல் ஆணையர்.
குடியரசுத் தலைவர் தேர்தல்:
வேட்புமனு தாக்கல் துவக்கம் ஜூன்-15.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - ஜூன் 29.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை - ஜூன் 30
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - ஜூலை 2
ஜூலை 18-ல் வாக்குப்பதிவு.
வாக்கு எண்ணிக்கை - ஜூலை 21 - தலைமை தேர்தல் ஆணையம்.
* காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.
புக்யா சினேகப்ரியா எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்.பி.யாக நியமனம்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பள்ளிக்கரணை துணை ஆணையராக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளார்.
புக்யா சினேகப்ரியா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் செய்தித்தாள் நிறுவன ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பண்டிகங்காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அகத்தில் உள்ள பள்ளிகரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையா, மதுரை மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக வனிதா நியமனம்.
சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு 2 துணை ஆணையராக சக்திவேல், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஆரோக்கியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி, சேலம் நகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா, திருச்சி நகர தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் உறுப்பினர்கள் அளவை 256ல் இருந்து 512 ஆக அதிகரித்துள்ளது.
* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக "Out of the Box Thinking" என்ற இணைய பயிற்சி வகுப்பை சென்னை IIT அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு:
https://www.iitm.ac.in/happenings/press-releases-and-coverages/iit-madras-launches-new-out-box-thinking-course-school
விருப்பமுள்ள மாணவர்கள் பதிவு செய்ய :
https://pravartak.org.in/out-of-box-thinking.html
No comments:
Post a Comment