அக்னிப்புரட்சி இன்றைய 13.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 13.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 13.06.2022) முக்கிய செய்திகள்.

* கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாகத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு கீழ் மாற்றுவதா?

தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

அரசின் முடிவால் தலைமை ஆசிரியரின் கண்காணிப்பில் மாணவர்கள் இருக்க இயலாத சூழ்நிலை ஏற்படலாம்.

முதல்வர் தலையிட்டு, மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்.

* திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ட்வீட்

லாக்கப் மரணங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - ஈபிஎஸ்

* தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது: இருந்தாலும், ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்

ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை; பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும்- முதல்வர்.

* அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணை

* திருவள்ளூர், புழல் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடக்கம்.

எண்ணும் எழுத்தும் திட்டமும் அதன் செயல்பாடுகளும்:

கற்றல் இடைவெளியை குறைக்கவும், கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும் தொடங்கப்பட்ட திட்டம்தான் " 'எண்ணும் எழுத்தும்" திட்டம்.

இதன் மூலம் மாணவர்களுக்கு படைப்பாற்றல், அறிவாற்றல், தன்னம்பிக்கை அதிகமாகும்.

திட்டத்தை செயல்படுத்த செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடல், பாடல், நடித்துக்காட்டுதல், பொம்மலாட்டம் என்று பல்வேறு வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக இல்லாமல், தந்தையாக கேட்கிறேன் மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு, படிப்பு என்று இருக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு.

ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 29 காசுகளாக வர்த்தகம்.

* 2023 - 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர்களுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்கள் ₹44,075 கோடிக்கு 2 தனித்தனி நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளன.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ₹23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ₹20,500 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

* தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐ.எஃப்.எஸ்.-யை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த உதயன், ஐ.எஃப்.எஸ் வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்குநராக தீபக் பில்கி, ஐ.எஃப்.எஸ் நியமித்து வனத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

* "ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது”

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது.

இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அனைத்து அச்சு, மின்னணு ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

* கும்பகோணம் - புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை:

தஞ்சை: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட சரண்யா-மோகன் தம்பதி வெட்டிக்கொலை.

சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரின் மைத்துனர் ரஞ்சித்தையும் போலீஸ் தேடி வருகிறது.

* தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.

தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1536361491569422336?t=M0kysoIzEy-8rCGJQd5QoA&s=19

* காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு .

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தகவல்.

* தருமபுரி மாவட்டம் மாதேஹல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு முதலமைச்சர் இரங்கல்

அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவு

* நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை

நாளையும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages