அக்னிப்புரட்சி இன்றைய (14.06.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ.4,740க்கு விற்பனை.
* டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது.
எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியாவை கைது செய்தது டெல்லி காவல்துறை.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் இன்றும் அமலாக்கத்துறை விசாரணை.
* பெங்களூருவில், பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.
* இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும்.
* கல்லூரிகளில் 100% பாடங்கள் நடத்தப்படும்-அமைச்சர் பொன்முடி.
மதுரை காமராஜர் பல்கலை. இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற சுற்றறிக்கை அனுப்பப்படும்- பொன்முடி.
* அதிமுகவில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போதே இரு தரப்பு ஆதரவாளர்கள் கோஷம்.
* சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு.
* ஒற்றைத்தலைமைதான் அவசியம் என்பதை பெரும்பான்மையான நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்
வர உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் - ஜெயக்குமார் பேட்டி
* இந்தியாவில் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கியது.
மத்திய அரசின் 'பாரத் கௌரவ்' திட்டத்தின் கீழ் கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இயக்கம்.
மேள தாளங்கள், தோரண அலங்காரத்துடன் புறப்பட்டது தனியார் ரயில் .
* காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் அதிகமாக உள்ளது பொறுத்துக்கொள்ள முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? - அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.
No comments:
Post a Comment