அக்னிப்புரட்சி இன்றைய (15.06.2022) முக்கிய செய்திகள்.
* சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ராகுல்(11) உயிருடன் மீட்பு.
100 மணி நேர முயற்சிக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தகவல்.
* குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்.
ஜூன் 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது.
* நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
1996-2001 கபிலர் மலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.கே.வீரப்பன்.
* மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு.
* பெண்களுக்கு விரைவில் ரூ.1000 நிதியமைச்சர் அறிவிப்பு.
குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
* கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
சிவகங்கை, சிங்கம்புணரி அருகே உள்ள கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு.
யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த உத்தரவு.
* குடியரசு தலைவர் தேர்தல் - மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை.
எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை.
டெல்லியில் நடைபெறும் ஆலோசனையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.
* தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு வரும் 18ம் தேதி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
* மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்.
தமிழக முதல்வரின் கடிதத்தை அரசியல் ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரின் அறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல.
மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினை- அமைச்சர் துரைமுருகன்.
* ஜனாதிபதி வேட்பாளர் - மூவர் குழு அமைப்பு.
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம் : மம்தா பானர்ஜி.
ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தகவல்.
* குடியரசுத் தலைவர் தேர்தல் - பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவாரிடம் வைத்த கோரிக்கையை அவர் மீண்டும் நிராகரித்துவிட்டார்
பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து முடிவெடுப்போம் - மம்தா பானர்ஜி
No comments:
Post a Comment