அக்னிப்புரட்சி இன்றைய (16.06.2022) முக்கிய செய்திகள்.
* எம்.ஜி.எம். குழுமத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது
சென்னையில் பல இடங்களில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துவருகிறது.
* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் - ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
* தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள்!
பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிப்பு!
* சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு.
* கடலூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் பறிக்க முயற்சி.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
பல்வேறு அரசு அலுவலர்களுக்கு, ஆட்சியர் அனுப்புவதுபோல குறுந்தகவல்களை அனுப்பி மோசடி.
* திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் - மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
ஏற்கனவே, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோயில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 12,000ஐ தாண்டியது-24 மணி நேரத்தில் 11 பேர் பலி.
புதிதாக 12,213 பேர் பாதித்துள்ளனர்; புதிதாக 11 பேர் இறந்துள்ளனர்
தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,624 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58,215 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு பதக்கங்கள்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதலிடத்தில் கோவை, 2-வது இடத்தில் தஞ்சாவூர், 3-வது இடத்தில் கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கினார்.
* சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் 20 காவல் நிலையங்கள் திறப்பு.
* தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு.
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித நோயும் இல்லாத நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
* 10 ம் வகுப்பில் மக்கு மாணவன்; தற்போது எடுத்தவர் கலெக்டர்……
பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு 36, ஆங்கிலத்தில் 35, அறிவியல் பாடத்தில் 38 மதிப்பெண்கள் எடுத்தவர், இப்போது ஒரு மாவட்டத்துக்கே கலெக்டர் என்றால் நம்ப முடியுமா?
முடியும் என்று சாதித்து காட்டி இருக்கிறார் துஷார் சுமேரா.
குஜராத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்; பத்தாம் வகுப்பில் இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை பெற்ற போதும், தளராமல் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இப்போது, குஜராத்தில் உள்ள பாரூச் மாவட்டத்தின் கலெக்டராக இருக்கிறார்.
இவர் 10 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை சக ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.
இதை கண்ட நெட்டிசன்கள், துஷாரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பதிவு வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை அள்ளி இருக்கிறது.
* சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு..!
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ₹750 அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது புதிதாக பெறப்படும் இணைப்புகளுக்கு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ₹1,450 ரூபாயாக இருந்தது. தற்போது இது ₹2,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் இன்று இரவுக்குள் neet.nta.nic.in இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஜூலை 17-ல் நடைபெறும் தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
* போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்கள் உடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்கள் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பேருந்து சேவைகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
* 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் - தேர்வுத்துறை.
நாளை வெளியாவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.
* திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சற்றுமுன் வானில் பெரிய சத்தத்துடன் ராக்கெட் சென்றுள்ளது.
* சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
சற்று நேரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், தலைமை அலுவலகம் வந்தார் ஓபிஎஸ்.
தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் - பன்னீர்செல்வம்.
* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிட்டமைக்காக 11 கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போக்கவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
* தென்காசி: புதிய மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் (56) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.
* விவாகரத்துக்கு பிறகு, தாய் வீட்டிலிருந்து மனைவி கொண்டு வந்த உடைமைகளை கணவன் வைத்திருக்க முடியாது. - கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு.
* இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, ஜெட் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விமான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவதாக முடிவெடுத்துள்ளது.
* குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* பாலாற்றில் ஒவ்வொரு 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகளை கட்டக் கோரியவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.
லோக் தந்த்ரிக் ஜனதா தள கட்சி தலைவர் ராஜகோபாலுக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
முறையாக ஆய்வு செய்யாமல் விளம்பரத்திற்காக தொடர்ந்த வழக்கு என்பதால் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தடுப்பணைகள் எங்கெங்கு கட்டப்பட வேண்டும் என்பதை தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை எம்.பி, முனுசாமி எம்.எல்.ஏ சந்திப்பு
ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆலோசனை
* நாட்டின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும்.
அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை - அக்னிபத் திட்டம் குறித்து ராகுல் காந்தி ட்வீட்.
* நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28%-ஆக அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு ₹73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
* தமிழ்நாட்டில் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
மகளிருக்கான கட்டணமில்லா அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் - சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடு குறித்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தல்.
* மாநிலங்கள் இடைமன்ற கூட்டத்தை ஆண்டுக்கு 2 முறை நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டிய மாநிலங்கள் இடைமன்ற கூட்டம் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதே மாநிலங்கள் இடைமன்ற குழுவின் நோக்கம் என கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்.
கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* திடீரென்று ஒற்றைத்தலைமை பிரச்சினை கிளப்பியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்.
ஒற்றைத்தலைமை பிரச்சினையில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை.
விட்டுக்கொடுப்பவர் எப்போதும் கெட்டுப்போவதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தேன்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பீர்களா? என்ற கேள்விக்கு, தலைமை கழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு நான் என்றைக்கும் கட்டுப்படுவேன் என ஓ.பி.எஸ் பதில்.
பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வேறு ஒருவரை கொண்டு வரக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - ஓ.பி.எஸ்
எந்தவொரு அதிகார ஆசையும் கொண்டவன் நான் இல்லை - ஓ.பி.எஸ்
எந்த காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையக்கூடாது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார்.
தற்போதைய சூழலில் இரட்டை தலைமை நன்றாகதான் சென்று கொண்டுள்ளது. அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஓரங்கட்ட முடியாது.
தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வரப்பட்டது. எனவே ஒற்றைத்தலைமை என்பது தேவையற்றது.
பொதுக்குழுவில் எனது ஒப்புதலின்றி பொதுச்செயலாளர் பதவிக்கு தீர்மானம் போட முடியாது - ஓ.பி.எஸ்
14 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை கூட்டி விவாதித்து எடுக்கும் முடிவுக்கு, நான் கட்டுப்படுவேன். எடப்பாடி பழனிசாமியும் கட்டுப்பட வேண்டும் - ஓ.பி.எஸ்.
பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் ஏற்கனவே துணை முதல்வர் பதவியை ஏற்று கொண்டேன்.
ஜெயக்குமார் அளித்த பேட்டியால்தான் ஒற்றைத்தலைமை பிரச்சினை பெரிதானது - ஓ.பி.எஸ்
* சேலத்திலுள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment