அக்னிப்புரட்சி இன்றைய (18.06.2022) முக்கிய செய்திகள்.
* குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி தனது தாயாரின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.
காந்தி நகரில் உள்ள தயார் ஹீராபென் இல்லத்தில் அவரை சந்தித்து பிரதமர் மோடிஆசி பெற்றார்.
* குஜராத், வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணித்தார்.
பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
* தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமானவரி சோதனை.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
* வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை:
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய ஆலோசனையின்படி தேர்தல் சட்ட திருத்த சட்டத்தின் 4 முக்கிய அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும்.
இதுதவிர 18 வயது நிரம்பியவுடனே வாக்காளராக பதிவு செய்யும் வகையில் ஆண்டுக்கு 4 கட்-ஆப் தேதிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும்வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை என குறிப்பிட்டு திருத்தப்படுகிறது.
இதன் மூலம் தொலைதூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும்.
தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலில் வந்துள்ளது.
இது தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக கிரண் ரெஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் பல்வேறு சலுகைகளை அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
துணை ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் வயது வரம்பிலும் 3 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படும்.
* வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதை போல, இளைஞர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ‘அக்னிபாத்' திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற நேரிடும்.
கடந்த 8 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களையும் விவசாயிகளையும் மத்திய பாஜக அரசு அவமதித்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்வீட்.
* முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அலுவலகம் வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கம்
* அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தொண்டர்களிடையே மோதல்.
தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு காயம் என தகவல்.
ரத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம்.
எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு தாக்கினர்- மண்டை உடைக்கப்பட்ட பெரம்பலூர் அதிமுக நிர்வாகி ரத்தகாயங்களுடன் பேட்டி.
* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை
"மேகதாது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது தவறானது"
"மேகதாது தொடர்பான சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றம் தொடரும்"
"காவிரியின் உரிமையை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும்"
"கர்நாடகா அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது"
* சிதம்பர ரகசியத்தையா நான் போட்டு உடைத்தேன்?
பெரும்பான்மையினர் ஒற்றைத் தலைமை வேண்டுமென்று கேட்டார்கள்; அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அதைத்தான் நான் சொன்னேன்; அதில் என்ன தவறு உள்ளது?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
* இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது.
அக்னிபத் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை.
இளைஞர்கள் அமைதியான வழியில் போராடவேண்டும் - சோனியா காந்தி.
* குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மறுப்பு.
ஏற்கனவே சரத் பவார் மறுப்பு தெரிவித்த நிலையில் பரூக் அப்துல்லா அறிவிப்பு.
* கூகுள் டிரைவில் தகவல்களை சேமிக்க தடை: அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
அரசின் பாதுகாப்பு அம்சங்கள், ரகசியங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் விபிஎன் மற்றும் கிளவுட் சர்வீஸ்களான கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தவும், அதில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
* காஷ்மீர் பண்டிட்கள், பசு பாதுகாவலர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து - நடிகை சாய் பல்லவி விளக்கம்.
வீடியோ: https://youtu.be/QAzaMGgDaPs
விமர்சனங்கள் எழுந்த நிலையில் சாய் பல்லவி வீடியோ வெளியீடு!
* அதிகரிக்கும் கொரோனா - ஆட்சியர்களுக்கு உத்தரவு!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும்-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.
No comments:
Post a Comment