அக்னிப்புரட்சி இன்றைய (19.06.2022) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் இன்று 'தந்தையர் தினம்' கொண்டாட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்றுக்கிழமை 'உலக தந்தையர் தினம்' ஆக கொண்டாடப்படும்.
தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே 'தந்தையர் தினம்' கொண்டாட்டம்.
* உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலம் வனப்பகுதியில் அமைந்துள்ள பொக்காபுரம் பழங்குடியினர் கிராமத்தில் பசுவராஜ் என்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை.
* தமிழ்நாடு திறந்தநிலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியானவர்கள் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் tnou.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பார்த்தசாரதி அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்.
* ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை
தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையருக்கு நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடப்பு ஆண்டு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஓய்வூதியர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக சில நடைமுறைகளை ஏற்படுத்தி, அதை ஓய்வூதியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
அதாவது டி.எல்.சி. என்ற மின்னணு வாழ்நாள் சான்றிதழை 'ஜீவன் பிரமான்' இணையதள சேவை; 'ஐ.பி.பி.பி.' என்ற வீட்டு வாசலுக்கு வரும் இந்திய தபால் 'பேமெண்ட்' வங்கி சேவை; இ.சேவை மையம்; 'ஜீவன் பிரமான்' இணையதள சேவையுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை வசதியை கொண்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் சேவை; தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது; நேரில் சென்று ஆஜராவது ஆகிய சேவைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். 'ஐ.பி.பி.பி.' சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை, ஓய்வூதியர்களின் வீட்டு வாசல் வரை வரவுள்ளது. 'ஜீவன் பிரமான்' இணையதளம் மூலம் சான்றிதழை பெறுவதற்காக 200 பயோமெட்ரிக் உபகரணங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த சேவைகள் பற்றி ஓய்வூதியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான உத்தரவு, மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
* நினைவூட்டல் பதிவு
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
* சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்-மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு.
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்-ககன்தீப் சிங் பேடி.
* டெல்லியில், பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின் கீழ் பிரதான சுரங்கம் மற்றும் 5 சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரூ.920 கோடி செலவில் மதுரா, பைரோன் மார்க் சாலைகளில் 6 சுரங்கப்பாதைகள் அமைப்பு.
சுரங்கப்பாதை மூலம் பைரோன் மார்க்கில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
* கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
நாளை முதல் முப்பதிவில்லா விரைவு சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது- தெற்கு ரயில்வே.
மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 10.40 மணிக்கு சென்றடையும்.
மறுமார்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்- தெற்கு ரயில்வே.
திங்கள் கிழமை முதல் மன்னார்குடி - மயிலாடுதுறை - மன்னார்குடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில் இயக்கப்பட இருக்கிறது. கோரோனாவிற்கு முன்பு பாசஞ்ஜர் வண்டியாக இயங்கிவந்த இந்த ரயில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, தற்போது சிறப்பு எக்ஸ்பிரஸ் வண்டியாக இயக்கப்பட இருக்கிறது.
மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06404) MQ - MV Exp SPL வண்டி பகல் 10.40 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். அதுபோல மாலை 5 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் (வண்டி எண் 06403) MV - MQ Exp SPL வண்டி மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.
சென்னை - மன்னார்குடி மண்ணை எக்ஸ்பிரஸ் பெட்டிகளை வைத்து இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் இது 18 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில் மூன்று குளிர்சாதன பெட்டிகளை தவிர்த்து மற்ற 15 பெட்டிகளும் முன்பதிவற்ற பெட்டிகளாக கருதப்படும். தினசரி இயங்கும் இந்த வண்டிகள் பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், திருவாரூர் சந்திப்பு, குளிக்கரை, திருமதிக்குண்ணம், கொரடாச்சேரிமற்றும் நிடாமங்கலம் சந்திப்பு ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும்.
* முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு - தமிழக அரசு.
ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - தமிழக அரசு.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் அறிவிப்பு.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தல்.
* விழிப்புணர்வு பதிவு
கிரெடிட் / டெபிட் கார்டு எண்/கார்டு காலாவதி தேதி/CVV/OTP/இன்டர்நெட் பாஸ்வேர்ட் போன்ற ரகசிய விவரங்களை யாருடனும் நீங்கள் கோராத அழைப்புகள்/SMS/IVR & மொபைல் KYC /கூடுதல் பலன்கள்/பணம் திரும்பப்பெறுதல் அல்லது ஏதேனும் திரும்பப் பெறுதல் போன்ற மின்னஞ்சல்களைப் பெறும்போது யாருடனும் பகிர வேண்டாம். இது உங்கள் தனிப்பட்ட தகவலுக்கான அணுகலை வழங்கக்கூடும், இதன் விளைவாக உங்கள் நிதி இழப்பு ஏற்படலாம்.
* ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் தீ விபத்து.
டெல்லிக்கு சென்ற விமானம் பாட்னாவில் தரையிறக்கம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் தீ விபத்து.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்
* காற்றாலை மூலம் கடலிலிருந்து மின் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வெளிநாடு பயணம்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 5 பேர் கொண்ட குழு லண்டன், ஸ்காட்லாந்து செல்கிறது.
* முக்கிய சமையல் எண்ணெய் பிராண்டுகள் லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறைக்கின்றன..!
* சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்-மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு.
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்-ககன்தீப் சிங் பேடி.
* அக்னிபத் திட்டத்தில் சேர வரும் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூலை 24 முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
முதல் தொகுப்பு அக்னிவீரர்களுக்கு இந்தாண்டு இறுதியில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன - ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா அறிவிப்பு.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அக்னிபத் திட்டத்தில் இடமில்லை.
முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம்.
அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்.
அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தீவைப்பு, வன்முறை, போராட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்தது இல்லை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும்.
100% காவல்துறை வெரிபிகேஷன் உண்டு, அது இல்லாமல் ஒருவரும் சேர முடியாது - ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி.
* திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்து.
3 பேர் உயிரிழப்பு, 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு.
* டெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள 75 நகரங்களுக்கு ஜோதி கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 28ல் மாமல்லபுரம் வந்தடையும்.
ஜூலை 28 முதல் ஆக. 8 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 243 பேர் டிஸ்சார்ஜ்; உயிரிழப்பு இல்லை.
* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தந்தையர் தினத்தன்று பிறந்த தங்கள் மகனுக்கு 'ஓரியான் கீச் சிங்' என பெயரிட்டுள்ளதாக யுவராஜ் சிங் ட்வீட்
* பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை பெய்ய ஆரம்பித்ததால் .இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் இறுதி T-20 கிரிக்கெட்போட்டி தொடங்குவதில் தாமதம்
* எதிர்காலத்தில் அக்னிவீரர்கள் ஆள்சேர்ப்பு 1.25 லட்சமாக உயரும்.
ஒவ்வொரு ஆண்டும் முப்படைகளில் இருந்து சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர்.
ஓய்வு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என இதுவரை யாரும் யாரிடமும் கேட்க முயன்றது இல்லை.
முப்படைகளுக்கான இந்த சீர்த்திருத்தம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது
ராணுவத்தில் அனுபவத்துடன், இளைஞர்களை இணைத்து இளமையாக வைக்க விரும்புகிறோம். இதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது.
தற்போது திட்ட ஆய்வுக்காக 46 ஆயிரம் வீரர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகள் ஆள்சேர்ப்பை 50,000 முதல் 1 லட்சம் வரை அதிகரிக்கப்படும். - லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி
No comments:
Post a Comment