அக்னிப்புரட்சி இன்றைய (20.06.2022) முக்கிய செய்திகள்.
* இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது
* தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.
tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் காலி பணியிடங்களை நிரப்ப இன்று முதல் வேட்புமனு தாக்கல்.
ஜூலை 9ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு ஜூன் 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் - மாநில தேர்தல் ஆணையம்.
* சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது!
ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின!
மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் தத்தளித்தன!
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன
சென்னை அசோக் நகர் பகுதியில் கனமழையால் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் சாய்ந்து விழுந்த மரத்தை அகற்றும் பணி தீவிரம்
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது!
* 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதிப்பெண் விபரங்களை காலை 10 மணி முதல் மாணவர்கள் இணைய தளங்களில் பார்க்கலாம்
எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்
tnresults.nic.in, dge.tn.gov.in
dge1.tn.nic.in, dge2.tn.nic.in-ல்
தேர்வு முடிவுகளை அறியலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
* அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தல்.
* 10 ம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100 க்கு 100
* அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு!
23 ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்தியலிங்கம் தரப்பு கடிதம்
* இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பணிகளுக்கு திரும்புவேன்
ஓய்வில்லை நமக்கு! முதலிடமே இலக்கு! முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் -முதல்வர் ஸ்டாலின்
தொடர்ச்சியான பணி, தட்பவெப்ப மாற்றத்தால் கடந்த 20ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இன்றும், நாளையும் ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால், அதன் பின் தொடர்ந்து பணிகளை செய்வேன் - முதல்வர் ஸ்டாலின்.
* வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.
வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
* அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய ராணுவம்.
joinindianarmy.nic.in என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்-அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கும்.
* சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்ற அறநிலையத்துறையின் அறிவிப்பு .
முதல் நாளான இன்று 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன நாளை பிற்பகல் 3 மணி வரை கருத்து தெரிவிக்கலாம்.
சாதிய வன்கொடுமை மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும் கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டும்.
அதிமுக உட்கட்சி பூசலில் கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு விருப்பமில்லை -தொல். திருமாவளவன் எம்.பி.
* அக்னிபாத் போராட்டக்காரர்களின் பந்த் அறிவிப்பால் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்.
தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்
மறுஅறிவிப்பு வரும்வரை பிளாட்பார்ம் டிக்கெட் வினியோகம் கிடையாது என அறிவித்த ரயில்வே
ரயில்வே பொதுச்சொத்துகள் சேதமாவதை தடுக்க பயணிகள் அனைவரும் ஒத்துழைக்க கோரிக்கை
கோடை சீசனில் இயங்கிய ஊட்டி சிறப்பு மலை ரயில் நிறுத்தம்!
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே 3 சுற்றுகள் முன்பதிவு செய்யப்பட்ட ஜாய் ரைடு சிறப்பு ரயில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் இயக்கப்பட்டது. ஜூலை 21ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டன.
கடந்த ஒரு மாதமாக ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதனால், ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று (19ம் தேதியுடன்) சிறப்பு ரயில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
* 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடத்தில் 3,481 பேர் சதம்.
பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர், கிட்டத்தட்ட 90.07 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றவர்கள்.
இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் அதிகம்:
10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில் 2,186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3,841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1,009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை.
100 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை தகவல்.
* அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து.
அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை.
No comments:
Post a Comment