அக்னிப்புரட்சி இன்றைய (21.06.2022) முக்கிய செய்திகள்.
* நாடு முழுக்க இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு.
* அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
tngasa.in, tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* திமுக எம்.பி. கனிமொழி கொரோனா தொற்றால் பாதிப்பு.
வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார் கனிமொழி.
* ஜூன் 27 ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.
முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை.
* மேகதாது அணை விவகாரம்- தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி பயணம்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம்- தமிழகம் கடும் எதிர்ப்பு.
* ஹாங்காங்கில் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது.
ஜம்போ கப்பல் உணவகம் ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது.
1976ம் ஆண்டில் சேவையை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை தோற்றம் கொண்டது.
பிரிட்டிஷ் ராணி எலிசபத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கப்பல் உணவகத்தின் சேவை நிறுத்தப்பட்டது.
இதன் பெரும் சுமை ஏற்பட்டதால் முழுவதுமாக நிறுத்தி விட்டதாக உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயற்சித்தும் மீட்கமுடியவில்லை என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
கப்பல் மூழ்க தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
* அக்னிபத் திட்டத்தில் விமானப்படையும் ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை வெளியிட்டது.
ஜூன் 24 முதல் ஜூலை 5ம் தேதி வரை இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான பதிவு நடைபெறும்.
ஜூலை 24ம் தேதி முதற்கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும் - விமானப்படை.
* உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம்.
ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்.
* அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்பாட்டுக்கு தடை-காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு.
சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு.
* எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு.
1998-2004 வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹா.
2018 ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து கடந்தாண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் இன்று விலகியுள்ளார்.
* கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகளை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.
* அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு.
வரும் 23ம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடக்க உள்ளது.
* மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்கிறது?
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலையில் உள்ளது. ஆளும் கட்சியான சிவசேனாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு துணை முதலமைச்சர் பதவி தராததால் முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
ஆட்சியில் தொடர 143 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலையில் சிவசேனா கட்சிக்கு 149 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதால் சிவசேனா அரசு கவிழும் நிலையில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க இருப்பதால் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அரசியல் குழப்பத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக கூட்டணிக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவில்லாமல் மட்டும் 119 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
மகாராஷ்டிரா அரசியலைப் பொறுத்தவரை தற்போது 2 வகையான ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். மற்றொன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு ஆளுநர் உத்தரவிடப்படுவார். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் ஆட்சி கவிழும்.
* அக். 1ம் தேதிக்கு பதிலாக செப். 1 முதல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஆகஸ்ட் கடைசி வாரத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கக் கோரி, பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்.
* அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் - தர்மயுத்தத்தின் போது ஓ.பி.எஸ். பக்கம் நின்ற முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.
* ஓபிஎஸ் பலம் குறைகிறதா? எத்தனை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. அவருக்கு ஆதரவாக இருந்த 2 மாவட்டச் செயலாளர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 7-ஆக குறைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் எழுந்ததை அடுத்து, கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் தலைமை வகிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பதவிக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுகவில் இரு கோஷ்டியினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, யாருக்கு அதிக மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 65 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வதுக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன்திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலக்சாண்டர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகியோர் திடீரென இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளராக இருந்த 10 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 7-ஆக குறைந்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி, தேனி மாவட்ட செயலாளர் சையது கான் , சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், ஆகிய 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
இதனிடையே, 8-வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் வைத்து ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தன்னை சந்திக்க வந்த தொண்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த செய்தியாளர்கள், "பொதுக்குழு நடைபெறுமா?" "நீங்கள் பங்கேற்பீர்களா?" என கேள்வியெழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் திரும்பிச் சென்றுவிட்டார்.
* உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகில் திடீர் நிலநடுக்கம்.
குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சிலை நிறுவப்பட்டு உள்ளது. நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், 'ஒற்றுமை சிலை' என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் படேல் சிலை அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது .ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.
அதன் மையப்பகுதி தெற்கு குஜராத்தில் உள்ள கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ளது. இது 12.7 கிமீ ஆழத்தில் பதிவானது என நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வரவிருக்கும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு வின் பெயரை அறிவித்துள்ளது.
முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் NDA வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிக்கிறோம்: பாஜக தலைவர் ஜேபி நட்டா.
No comments:
Post a Comment