அக்னிப்புரட்சி இன்றைய (25.06.2022) முக்கிய செய்திகள்.
* அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்.
இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் மாணவிகள் பெயர்களை பதிவு செய்யலாம் - உயர்கல்வித்துறை.
ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உத்தரவு.
penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.
* இன்றைய சிந்தனை
தொழிலில் தனித் தன்மை.
ஒருவன் ஒரு தொழிலில் முன்பு பெற்ற அனுபவமே அவன் தொழில் திறனை வளர்க்க உதவும்.
முன் அனுபவங்களைக் கொண்டு தொழிலின் போலித் தன்மையையும், உண்மைத் தன்மையையும் பிரித்து அறிந்து தொழிலில் ஈடுபட்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம்.
ஒரு தொழில் தொடங்கும் போது அந்தத் தொழிலில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற சரியானவர்களைக் கண்டு அறிந்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முந்தைய அனுபவமே ஒருவருக்கு எல்லா வகையிலும் உதவும். தொழில் முன்அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.
ஒரு விவசாயி அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என் தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார். ‘
இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான இளைஞனை அனுப்புகிறேன்’ என்றார் ஞானி..
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத் தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார்.
தனக்குக் கிடைத்த பணியாளர் மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது கால் படாமல் நடந்து கொண்டு இருப்பதையும் கண்டு மனம் மகிழ்ந்தார் அந்த விவசாயி.
ஞானியிடம் சந்தித்து நன்றி சொல்லி விட்டு,,''எதற்காக இவரை அனுப்ப உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.
நான் உரிய நபரைத் தேர்ந்தெடுத்து மூன்று மாதங்கள் காகிதப் பூக்கள் செய்கிற தொழிற்சாலைக்குப் பணிக்கு அனுப்பினேன்.
அங்கே வாசனை அற்ற பொய் மலர்களைப் பார்த்தவனுக்கு உயிர் உள்ள மலர்களுடன் பழகுவதில் களிப்பும், ருசியும் ஏற்பட்டது.
அவன் இந்த அழகிய பூ, செடிக்கு மட்டுமே சொந்தம் எனக் கருதி அதைப் பறிக்காமல், வாட விடாமல் செடிகளைப் பாதுகாத்தான்.
ஆம்.,போலியிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ளும் போது தான் அது வரமாக வாய்க்கிறது’ என்றார் ஞானி.
அனுபவமும் எந்த செயலிலும் முக்கியம்... அனுபவங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்பவரும் இருக்கவே செய்கின்றனர். உண்மை தான்.
அனுபவம் மட்டும் இருந்தால் போதாது தான். அதைத் தொடர்ந்து உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும்.
நாம் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு துவங்கியது.
பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்ச்சி அளிக்கிறது.
முதல்வராக வரவில்லை, சொந்த பிள்ளைகளாக எண்ணி உங்களை வாழ்த்த வந்துள்ளேன்.
மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இணையத்தை பார்த்து அறியும் சூழல் தற்போது உள்ளது.
கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
* சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை! - மருத்துவர் இராமதாசு அய்யா பாராட்டு.
தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்காக சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் விபிசிங் பிறந்த நாளில் உறுதியேற்போம்
#SocialJustice #OBCReservation #VPSingh #சமூகநீதி் #இடஒதுக்கீடு
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (O.B.C)க்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய வரலாற்றில் செயற்கரிய சாதனை படைத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் இன்று. அவரைப் போற்றுவோம். இந்திய நாட்டு மக்கள் அவரை மறக்க முடியாது. மறக்கக்கூடாது. சமூகநீதியை உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டிருக்கும் மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் என்றும் அவரை மறவோம். அவரைப் போற்றுவோம் ...
* பா.ம.க மாநாட்டில் வி.பி.சிங் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத நிகழ்வு. என் மனதில் இன்றும் நிழலாடுகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடைக்க இந்நாளில் உறுதியேற்போம் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி
* அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார்
உரிய நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் சி.வி.சண்முகம் தரப்பில் புகார் மனு
மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல் வைப்பு
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததால உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
* "சமூக நீதி நாயகன்" முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 92வது பிறந்த நாளையொட்டி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று (25.06.2022) சென்னை தி.நகர் தனது இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!
உடன் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு இணை செயலாளர்கள் சரவணன் வினோபா பூபதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்.!
* வரலாறு காணாத உச்சத்தில் முட்டை விலை:
நாமக்கலில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம்.
கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு.
இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என தகவல்.
* மும்பையில் இன்று (ஜூன் 25) முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் - மும்பை காவல்துறை அறிவிப்பு.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை.
* தமிழகத்தில் இன்றும் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்று ஒரேநாளில் மட்டும் 1,382 பேர் கொரோனாவால் பாதிப்பு
அதிகபட்சமாக சென்னையில் 607 பேர், செங்கல்பட்டில் 240 பேர் பாதிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 617 பேர் டிஸ்சார்ஜ்; உயிரிழப்பு இல்லை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்
* இன்றைய சிந்தனை: கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை...
கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம். பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன. தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
No comments:
Post a Comment